Home தமிழ் News சமையல் கொள்ளு ரசம் | கொள்ளு ரசம்

கொள்ளு ரசம் | கொள்ளு ரசம்

0
கொள்ளு ரசம் | கொள்ளு ரசம்

[ad_1]

தேவை:

கொள்ளு பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்(வறுத்தது)
தக்காளி – 1,
சீரகம் – ஒரு ஸ்பூன்,
மிளகு – அரை ஸ்பூன்,
தனியா – கால் ஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 2.
பூண்டு – 2 பற்கள்,
உப்பு – தேவையான அளவு,
கடுகு,
எண்ணெய் – தாளிக்க

பக்குவம்:

எண்ணெய் சேர்க்காமல் வெறும் வாணலியில் கொள்ளினை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு கொள்ளுப் பருப்புடன் சீரகம், மிளகு, வெங்காயம், பூண்டு மற்றும் தனியாவையும் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளுங்கள். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு தாளித்து அத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கினால் கொள்ளு ரசம் ரெடி. இந்த கொள்ளு ரசத்தை சாதத்துக்கும் பயன்படுத்தலாம் அல்லது மிதமான சூட்டில் சூப் போலவும் குடிக்கலாம்.

பலன்கள்:
கொள்ளுப் பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் இயல்புடையது. மேலும், உடல் சூட்டினை சமன்படுத்தி, கபத்தை அறுக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடெண்ட் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

[ad_2]

Source link

www.dinakaran.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here