Home தமிழ் News ஆரோக்கியம் சமந்தாவுக்கு வந்துள்ள மயோசிடிஸ் நோய் – அப்படின்னா என்ன? அதன் அறிகுறிகள் என்ன? | Samantha Suffering From Myositis: Its Symptoms, Causes And Treatment In Tamil

சமந்தாவுக்கு வந்துள்ள மயோசிடிஸ் நோய் – அப்படின்னா என்ன? அதன் அறிகுறிகள் என்ன? | Samantha Suffering From Myositis: Its Symptoms, Causes And Treatment In Tamil

0
சமந்தாவுக்கு வந்துள்ள மயோசிடிஸ் நோய் – அப்படின்னா என்ன? அதன் அறிகுறிகள் என்ன? | Samantha Suffering From Myositis: Its Symptoms, Causes And Treatment In Tamil

மயோசிடிஸ் என்றால் என்ன?

மயோசிடிஸ்
என்றால்
என்ன?

மயோசிடிஸ்
என்பது
ஒரு
அரிய
வகை
ஆட்டோஇம்யூன்
நோயாகும்.
இது
தசைகளை
பலவீனப்படுத்துவதோடு,
மிகுந்த
வலி
மற்றும்
சோர்வை
உண்டாக்கும்.
இந்த
நிலையானது
நோயெதிர்ப்பு
மண்டலத்தில்
உள்ள
சிக்கல்களால்
ஏற்படுகிறது.
அதாவது
நோயெதிர்ப்பு
மண்டலத்தில்
பிரச்சனை
இருந்தால்,
அது
ஆரோக்கியமான
திசுக்களை
தாக்கி
வலி
மற்றும்
பலவீனத்தை
ஏற்படுத்துகிறது.
மயோசிடிஸ்
என்பது
ஒரு
வகை
மயோபதி.
மயோபதி
என்பது
எலும்புகளுடன்
இணைந்துள்ள
தசைகளை
பாதிக்கும்
நோய்களைக்
குறிக்கும்
சொல்லாகும்.
இது
பொதுவாக
கை,
தோள்பட்டை,
கால்கள்,
இடுப்பு,
அடிவயிறு
மற்றும்
முதுகுத்தண்டில்
உள்ள
தசைகளை
பாதிக்கிறது.
இந்த
நிலை
குழந்தைகள்
மற்றும்
பெரியவர்களை
பாதிக்கிறது.
இருப்பினும்,
இது
ஆண்களை
விட
பெண்களிடையே
அதிகம்
காணப்படுகிறது.

காரணங்கள்

காரணங்கள்

மயோசிடிஸ்
எதனால்
ஏற்படுகிறது
என்பதை
ஆராய்ச்சியாளர்கள்
உறுதியாக
கூறவில்லை.
ஆனால்
மரபணு
மற்றும்
சுற்றுச்சூழல்
காரணிகள்
முக்கிய
பங்கை
வகிக்கலாம்.
அதாவது
வைரஸ்கள்,
பாக்டீரியாக்கள்,
புறஊதாக்கதிர்கள்,
புகைப்பிடிப்பது,
ஊட்டச்சத்து
சப்ளிமெண்ட்டுகள்,
தூசிகள்,
வாயுக்கள்
அல்லது
புகை
வெளிப்பாடு
போன்றவற்றால்
ஒருவருக்கு
மயோசிடிஸ்
வருவதற்கான
வாய்ப்புக்கள்
உள்ளன.

வகைகள்

வகைகள்

மயோசிடிஸ்
நிலையில்
5
வகைகள்
உள்ளன.
அவை:

1.
டெர்மட்டோமயோசிடிஸ்

2.
இன்க்லூசன்
பாடி
மயோசிடிஸ்

3.
ஜுவனைல்
மயோசிடிஸ்

4.
பாலிமயோசிடிஸ்

5.
டாக்ஸிக்
மயோசிடிஸ்

அறிகுறிகள்

அறிகுறிகள்


1.
டெர்மட்டோமயோசிடிஸ்

இந்த
வகை
மயோசிடிஸில்
முகம்,
மார்பு,
கழுத்து
மற்றும்
முதுகு
பகுதியில்
ஊதா-சிவப்பு
நிற
தடிப்புகள்
காணப்படும்.
இது
தவிர,
பிற
அறிகுறிகளும்
தென்படும்.
அவை
பின்வருமாறு:

*
கரடுமுரடான
தோல்

*
உடல்
சோர்வு

*
தசை
பலவீனம்

*
தசை
வலி

*
எடை
இழப்பு

*
ஒழுங்கற்ற
இதயத்துடிப்பு

2. இன்க்லூசன்-பாடி மயோசிடிஸ்

2.
இன்க்லூசன்-பாடி
மயோசிடிஸ்

இந்த
வகை
மயோசிடிஸ்
பெண்களை
விட
ஆண்களையே
அதிகம்
பாதிக்கிறது.
குறிப்பாக
இது
50
வயதிற்கு
மேற்பட்டோரை
பாதிக்கிறது.
அதன்
அறிகுறிகள்
பின்வருமாறு:

*
தசை
பலவீனம்

*
சமநிலை
பிரச்சனைகள்

*
பிடிப்பு
இழப்பு

*
தசை
வலி

3. ஜுவனைல் மயோசிடிஸ்

3.
ஜுவனைல்
மயோசிடிஸ்

இந்த
வகை
மயோசிடிஸ்
குழந்தைகளை
பாதிக்கிறது.
குறிப்பாக
இது
ஆண்
குழந்தைகளை
விட
பெண்
குழந்தைகளையே
அதிகம்
பாதிக்கிறது.
இதன்
அறிகுறிகள்
பின்வருமாறு:

*
சிவப்பு-ஊதா
தடிப்புகள்

*
களைப்பு
மற்றும்
மனநிலை
மாற்றங்கள்

*
வயிற்று
வலி

*
உட்கார்ந்து
எழும்
போது
சிரமப்படுவது

*
தசை
பலவீனம்

4. பாலிமயோசிடிஸ்

4.
பாலிமயோசிடிஸ்

பாலிமயோசிடிஸ்
தசை
பலவீனம்
போன்ற
அறிகுறிகளுடன்
தொடங்குகிறது.
இந்த
நோயானது
முதலில்
தசைகளை
தாக்குகிறது.
இதன்
அறிகுறிகள்
பின்வருமாறு:

*
தசை
பலவீனம்
மற்றும்
வலி

*
விழுங்குவதில்
பிரச்சனை

*
சமநிலை
பிரச்சனை

*
வறட்டு
இருமல்

*
கைகள்
தடித்து
இருப்பது

*
எடை
இழப்பு

5. டாக்ஸிக் மயோசிடிஸ்/ டாக்ஸிக் மயோபதி

5.
டாக்ஸிக்
மயோசிடிஸ்/
டாக்ஸிக்
மயோபதி

டாக்ஸிக்
மயோசிடிஸ்
என்பது
மருந்துகள்
அல்லது
கெமிக்கல்களால்
ஏற்படுவதாக
கூறப்படும்
வகை
மயோசிடிஸ்
நிலையாகும்.
இதன்
அறிகுறிகள்
பின்வருமாறு:

*
தசை
வலியுடன்
கூடிய
அல்லது
தசை
வலி
இல்லாத
தசை
பலவீனம்

*
நடந்த
பின்
அல்லது
நின்ற
பின்
அதிக
சோர்வு

*
விழுவது
அல்லது
தடுமாறுவது

*
படிக்கட்டு
ஏறுவதில்
சிரமப்படுவது

*
விழுவது
அல்லது
சுவாசிப்பதில்
சிரமப்படுவது

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

மயோசிடிஸ்
பிரச்சனைக்கு
பிரத்யேகமாக
எந்த
சிகிச்சையும்
இல்லை.
ஆனால்
தினசரி
வாழ்க்கையில்
அவற்றின்
தாக்கத்தை
குறைக்க
அறிகுறிகளுக்கு
ஏற்ப
மருத்துவர்கள்
சிகிச்சைகளை
வழங்குவார்கள்.
அதாவது
தசைகளில்
உள்ள
வீக்கம்
குறையும்
வரை
மருத்துவர்கள்
சிகிச்சை
அளிப்பார்கள்.
மேலும்
வலியைக்
குறைக்க
மற்றும்
பாதிக்கப்பட்ட
பகுதியில்
விறைப்புத்தன்மையைக்
குறைக்க
மருத்துவர்கள்
சில
ஸ்ட்ரெட்சிங்
பயிற்சிகள்
மற்றும்
உடற்பயிற்சிகளை
பரிந்துரைப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here