Homeதமிழ் Newsஆட்டோமொபைல்சிஎன்ஜி காரை வாங்குவதில், பலரது முதல் சாய்ஸ் இந்த பிராண்ட் தான் போல!! 2021இன் டாப்-10...

சிஎன்ஜி காரை வாங்குவதில், பலரது முதல் சாய்ஸ் இந்த பிராண்ட் தான் போல!! 2021இன் டாப்-10 சிஎன்ஜி கார்கள்!

சிஎன்ஜி காரை வாங்குவதில், பலரது முதல் சாய்ஸ் இந்த பிராண்ட் தான் போல!! 2021இன் டாப்-10 சிஎன்ஜி கார்கள்!

உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திராவின் எதிர்கால திட்டங்கள் மெதுவாக எலக்ட்ரிக்கை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் எலக்ட்ரிக் கார்கள் வடிவமைக்கப்பட்டு வருவதாக தற்போது வரையில் பெரியதாக எந்தவொரு செய்தியில் வெளியாகவில்லை.

சிஎன்ஜி காரை வாங்குவதில், பலரது முதல் சாய்ஸ் இந்த பிராண்ட் தான் போல!! 2021இன் டாப்-10 சிஎன்ஜி கார்கள்!

இதற்கு காரணம், மாருதி சுஸுகி இதற்கு மாற்றாக சிஎன்ஜி எரிபொருளின் பக்கம் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்கால இந்திய போக்க்குவரத்து மற்ற நாடுகளை போல் எலக்ட்ரிக்கை நம்பியே இருக்கும் என்பது உறுதி. இருந்தாலும் அத்தகைய நிலையை அடையும்வரை, முடிந்த அளவிற்கு சிஎன்ஜி கார்களை விற்பனை செய்யவே மாருதி சுஸுகி விரும்பவதுபோல் தெரிகிறது.

சிஎன்ஜி காரை வாங்குவதில், பலரது முதல் சாய்ஸ் இந்த பிராண்ட் தான் போல!! 2021இன் டாப்-10 சிஎன்ஜி கார்கள்!

இதற்கு சாட்சியாக, இந்த டாப்-10 லிஸ்ட்டில் சுமார் 7 கார்கள் இந்த இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனத்துடையது ஆகும். குறிப்பாக முதல் மூன்று இடங்களை மாருதி சுஸுகியின் வேகன்ஆர், எர்டிகா & ஈக்கோ மாடல்களின் சிஎன்ஜி வெர்சன்கள் பிடித்துள்ளன. இதன்படி முதலிடத்தில் உள்ள வேகன்ஆர் சிஎன்ஜி கடந்த 2021ஆம் ஆண்டில் மொத்தம் 78,122 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சிஎன்ஜி காரை வாங்குவதில், பலரது முதல் சாய்ஸ் இந்த பிராண்ட் தான் போல!! 2021இன் டாப்-10 சிஎன்ஜி கார்கள்!

கடந்த ஆண்டில் மொத்தமாக 1,83,850 வேகன்ஆர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் கிட்டத்தட்ட 42% பங்கு இந்த உயரம்-அதிகம் கொண்ட ஹேட்ச்பேக் காரின் சிஎன்ஜி வெர்சன் உடையது. இதற்கு அடுத்ததாக எர்டிகா சிஎன்ஜி கார்கள் 51,076 யூனிட்கள் கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது மொத்த எர்டிகா கார்களின் விற்பனை எண்ணிக்கை (1,14,408)-இல் 45% ஆகும்.

சிஎன்ஜி காரை வாங்குவதில், பலரது முதல் சாய்ஸ் இந்த பிராண்ட் தான் போல!! 2021இன் டாப்-10 சிஎன்ஜி கார்கள்!

ஆனால் எர்டிகாவை போல் கடந்த 2021இல் மொத்தம் 1,14,524 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள மாருதி சுஸுகி ஈக்கோவின் சிஎன்ஜி வெர்சன், இந்த வரிசையில் 3வது இடத்தில் இருந்தாலும் கடந்த ஆண்டில் 25,878 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஈக்கோ வாகனங்களின் விற்பனையில் 23 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த மூன்று மாருதி மாடல்களுக்கு அடுத்து இரு ஹூண்டாய் சிஎன்ஜி கார்கள் உள்ளன.

சிஎன்ஜி காரை வாங்குவதில், பலரது முதல் சாய்ஸ் இந்த பிராண்ட் தான் போல!! 2021இன் டாப்-10 சிஎன்ஜி கார்கள்!

மாருதி சுஸுகியை போல் ஹூண்டாய் மோட்டார்ஸும் இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கைகளில் சிஎன்ஜி கார்களை சந்தைப்படுத்தி வருகிறது. இந்த தென்கொரிய நிறுவனத்தின் அவ்ரா சிஎன்ஜி இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாகவே 37,585 அவ்ரா செடான் கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் பாதிக்கு மேலான (51%) பங்கு இந்த செடானின் சிஎன்ஜி வெர்சன் உடையது ஆகும்.

Rank Model CNG Sales 2021 Total Sales 2021 Growth (%)
1 Maruti Wagonr 78,122 1,83,850 42
2 Maruti Ertiga 51,076 1,14,408 45
3 Maruti Eeco 25,878 1,14,524 23
4 Hyundai Aura 19,127 37,584 51
5 Hyundai Grand i10 NIOS 14,326 95,515 15
6 Maruti Dzire 14,196 1,16,222 12
7 Maruti Celerio 6,679 32,853 20
8 Maruti Alto 6,529 1,66,233 4
9 Maruti S-Presso 4,926 65,478 8
10 Hyundai Santro 4,131 24,142 17

Source: Autopunditz

சிஎன்ஜி காரை வாங்குவதில், பலரது முதல் சாய்ஸ் இந்த பிராண்ட் தான் போல!! 2021இன் டாப்-10 சிஎன்ஜி கார்கள்!

கடந்த ஆண்டில் மொத்தமாக 19,127 யூனிட் அவ்ரா சிஎன்ஜி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்து செடான் உடலமைப்பில் சிஎன்ஜி காரை வாங்க நினைப்போரின் முதல் தேர்வாக ஹூண்டாய் அவ்ரா மாடல் தான் தற்போதைக்கு உள்ளதை அறிய முடிகிறது. மாருதி சுஸுகியின் காம்பெக்ட் செடான் மாடலான டிசைர் மாடலின் சிஎன்ஜி வெர்சன் (14,196 யூனிட்கள்) கூட இந்த வரிசையில் 6வது இடத்தில்தான் உள்ளது.

சிஎன்ஜி காரை வாங்குவதில், பலரது முதல் சாய்ஸ் இந்த பிராண்ட் தான் போல!! 2021இன் டாப்-10 சிஎன்ஜி கார்கள்!

இவை இரண்டிற்கு இடையே, 5வது இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் சிஎன்ஜி வெர்சன் உள்ளது. டிசைர் சிஎன்ஜி கார்களை காட்டிலும் கிராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி கார்கள் சில நூறு யூனிட்கள் மட்டுமே அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கு அடுத்து, மாருதி சுஸுகியின் செலிரியோ & ஆல்டோ மாடல்களின் சிஎன்ஜி வெர்சன்கள் முறையே 6,679 மற்றும் 6,529 யூனிட்களின் விற்பனை உடன் 7வது மற்றும் 8வது இடங்களில் உள்ளன.

Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read