Home தமிழ் News சமையல் சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் | Chicken Noodles Cutlet

சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் | Chicken Noodles Cutlet

0
சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் | Chicken Noodles Cutlet

[ad_1]

தேவையான பொருட்கள்:

பிச்சு போட்ட சிக்கன் – 200 கிராம்
4 Numbers நறுக்கிய வெங்காயம்
துருவிய கேரட் – 1 கப்
வெங்காயத்தாள் – 1 கப்
வேகவைப்பது நூடுல்ஸ் – 250 கிராம் வேகவைத்த
முட்டைக்கோசு – 1 கப்
குடை மிளகாய் – 1 கப்
 இந்து உப்பு – தேவையான அளவு
இஞ்சி – 1 தேக்கரண்டி
பூண்டு பேஸ்ட் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
சோள மாவு – 3 தேக்கரண்டி
லைட் சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
 பச்சை மிளகாய் சாஸ் -1 தேக்கரண்டி
முட்டை  -1 Numbers
தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்க வேண்டும். அவற்றுடன் 1 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், வேகவைத்த சிக்கனை உதிர்த்துவிட்டு சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் அடுத்ததாக சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்த்து அனைத்தையும் 2 நிமிடங்கள் நன்கு கிளறிவிட வேண்டும். முட்டைக்கோஸ், துருவிய கேரட், கேப்சிகம் சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும். கட்லட்டின் சுவையை அதிகரிக்க ஸ்பிரிங் ஆனியனைச் சேர்க்க வேண்டும். அனைத்து காய்கறிகளும் நன்கு வதங்கும் வரை சமைக்க வேண்டும்.

தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது. காய்கறிகள் நன்கு வதங்கிய பிறகு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, வேகவைத்த நூடுல்ஸ், 2-3 டீஸ்பூன் சோள மாவு சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து விட வேண்டும். பின்பு உங்களுக்குப் பிடித்த வடிவில் வட்டமாகவோ நீளமாகவோ கட்லெட்டை தட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கடாய் அல்லது தவாவில் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் எண்ணெயில் கட்லட்டை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வேகவிட்டு பொரித்தெடுக்க வேண்டும்.  சுவையான சுவையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் தயார். இதனை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற சாஸ் உடன் குழந்தைகளுக்குச் சாப்பிட கொடுக்கலாம்.

[ad_2]

Source link

www.dinakaran.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here