Home சினிமா செய்திகள் ஜானி டெப்பின் படத்தை மீண்டும் பயன்படுத்திய டிஸ்னி; மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் ரசிகர்கள்! | Johnny Depp face as Jack Sparrow used in Disney light show; Fans demand apology

ஜானி டெப்பின் படத்தை மீண்டும் பயன்படுத்திய டிஸ்னி; மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் ரசிகர்கள்! | Johnny Depp face as Jack Sparrow used in Disney light show; Fans demand apology

0
ஜானி டெப்பின் படத்தை மீண்டும் பயன்படுத்திய டிஸ்னி; மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் ரசிகர்கள்! | Johnny Depp face as Jack Sparrow used in Disney light show; Fans demand apology

[ad_1]

சமீபத்தில்தான் ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட் வழக்கில் ஜானிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கிறது. 2018 ஆம்பர் ஹெர்ட் எழுதிய கட்டுரையொன்றில் ‘நான் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவள்’ என்று குறிப்பிட்டது ஜானி டெப்பின் பெயருக்குக் களங்கள் விளைவிப்பதாக இருந்தது என்பதுதான் இந்த வழக்கிற்கான அடிப்படை. இதன் காரணமாகவே ஜானி நடிக்கவிருந்த ‘பைரட்ஸ் ஆஃப் கரீபியன்’ புதிய படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார் என ஜானி தரப்பில் சொல்லப்பட்டது.

2018-க்குப் பிறகு நான்கு வருடங்களாக ஜானியின் இமேஜைப் பயன்படுத்தாத டிஸ்னி, இப்போது ஜானிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பிறகு மீண்டும் அவரின் இமேஜை பயன்படுத்தியிருப்பது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

டிஸ்னி நிறுவனம் முன்னர் நடந்து கொண்டதற்காக ஜானியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ‘பைரட்ஸ் ஆஃப் கரீபியன்’ படத்தின் 6-வது பாகத்தில் ஜானியை நடிக்க வைக்கவேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.

ஜானி டெப்பும் முன்னர் டிஸ்னி பற்றிப் பேசும் போது, “இரண்டு வருடங்களாக உலகமே என்னை ‘மனைவியைத் துன்புறுத்துபவன்’ என்றே பேசி வந்திருக்கிறது. டிஸ்னி நிறுவனம் பாதுகாப்பாக இருக்க, என்னுடனான அதன் உறவை முடித்துக் கொண்டது என்றே நான் நம்புகிறேன். அந்த நேரத்தில் ‘Me too’ இயக்கம் முழு வீச்சில் இருந்தது. ஆனால் அவர்களது டிஸ்னி லேண்ட் ரைடுகளில் இருந்து என் கதாபாத்திரத்தை நீக்கவில்லை, பெயரை நீக்கவில்லை. கேப்டன் ஜேக் ஸ்பேரோ பொம்மைகள் விற்பதை அவர்கள் நிறுத்தவில்லை. சொல்லப்போனால் எந்த விற்பனைகளையும் அவர்கள் நிறுத்தவில்லை” என்று தெரிவித்தவர், “இனி 300 மில்லியன் டாலர்கள் கொடுத்தால்கூட டிஸ்னியின் ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தில் நடிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here