Home தமிழ் News ஆரோக்கியம் [’ஜெய்பீம்’க்கு சர்வதேச அங்கீகாரம் – கோல்டன் குளோப் விருது பட்டியலில் இடம்e]

[’ஜெய்பீம்’க்கு சர்வதேச அங்கீகாரம் – கோல்டன் குளோப் விருது பட்டியலில் இடம்e]

0
[’ஜெய்பீம்’க்கு சர்வதேச அங்கீகாரம் – கோல்டன் குளோப் விருது பட்டியலில் இடம்e]

[ad_1]

இருளர் இன மக்களின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சனைகளையும் அடிப்படையாக வைத்து உருவான திரைப்படம் ஜெய்பீம் (JAIBHEEM). 1990-களில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில், வன்னியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக சர்ச்சையும் எழுந்தது. 

ALSO READ | இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்தால் இழப்பீடு – SDPI வழக்கறிஞர் எச்சரிக்கை

பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இத்திரைப்படம் தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்து நடிகர் சூர்யாவுக்கு வெளிப்படையாக கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு பதில் கடிதம் எழுதிய சூர்யா, சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களின் வாழ்வியலை கூறும் படத்தின் மையக்கருவை, பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று பதில் கடிதம் மூலம் அன்புமணியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அத்துடன் பிரச்சனை முற்றுப்பெறவில்லை. பா.ம.கவினரும், வன்னியர் சங்கத்தினரும் ஜெய்பீம் படக்குழுவினருக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தனர். வன்னியர் சங்கம் சார்பில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ALSO READ | ஜெய் பீம் படத்துக்கு வலுக்கும் ஆதரவு: பாம்புகளை ஏந்தி பழங்குடியினர் போராட்டம

மேலும், இந்த திரைப்படத்துக்கு விருது வழங்கக்கூடாது என வன்னியர்கள் சங்கம் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது, ஆஸ்கார் விருதுக்கு அடுத்து சினிமா துறையில் புகழ்பெற்ற விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுப் பட்டியலுக்கு ஜெய்பீம் படம் தேர்வாகியுள்ளது. சிறந்த வெளிநாட்டு படப்பிரிவில் ஜெய்பீம் படம் தேர்வாகியுள்ளதாக, 2டி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகர்கள் சூர்யா, மணிகண்டன் மற்றும் நடிகை லிஜோமோல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here