Home தமிழ் News சமையல் ஜெல்லி ஜவ்வரிசி சர்பத் | Jelly Jawaharlal Nehru

ஜெல்லி ஜவ்வரிசி சர்பத் | Jelly Jawaharlal Nehru

0
ஜெல்லி ஜவ்வரிசி சர்பத் | Jelly Jawaharlal Nehru

[ad_1]

தேவையான பொருட்கள்:

இன்ஸ்டண்ட் ஆக்கரக்கா – 1 பாக்கெட் (12 கிராம்)
ஜவ்வரிசி – 200 கிராம்
பால் – 1 லிட்டர்
சீனி – 400 கிராம்
பாண்டான் இலை – 4
ரோஸ் எஸன்ஸ் (பாண்டான் இலை போடாவிட்டால்) – 5 துளிகள்
தண்ணீர் – 3 லிட்டர்
உப்பு – தேவையானஅளவு

செய்முறை:

இன்ஸ்டண்ட் ஆக்கரக்கா, தண்ணீர் 1 லிட்டர், சீனி 150 கிராம், உப்பு 1 தே.கரண்டி, பச்சை நிறம்- 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் ஒன்றாக காய்ச்சி உறைய விடவும். உறைந்த பின் ஆக்கரக்காவை துருவிக்கொள்ளவும். ஜவ்வரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் 1 தே.கரண்டி உப்பு, ஜவ்வரிசி போட்டு வேகவிடவும். (ஜவ்வரிசி நிறம் மாறிவிட்டால் வெந்துவிட்டதை அறியலாம்). வெந்ததும் அதை தண்ணீரில் கழுவி வடிகட்டியால் வடித்துக்கொள்ளவும். சீனி-250 கிராம்,தண்ணீர்- 1/2 லிட்டர், பாண்டான்இலை 4, உப்பு 1 தே.கரண்டி இவை அனைத்தையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.(சீனி பாகு) ஒரு பாத்திரத்தில் துருவிய ஆக்கரக்கா,பால்,ஜவ்வரிசி, தண்ணீர், தேவையான அளவு சீனி பாகு இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து குளிர் பதனப்பெட்டியில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here