டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றான குரூப் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது அயர்லாந்து. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து 20 ஓவர்களில் 106 ரன்களை எடுத்திருந்தது.
நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார் அயர்லாந்து வீரர் கர்டிஸ் கேம்பர். நான்கு ஓவர்களில் 26 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார் அவர்.
107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வீரத்தியது அயர்லாந்து. 15.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை அடைந்து வெற்றி பெற்றது அயர்லாந்து.