Homeதமிழ் Newsஆட்டோமொபைல்டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும்...

டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

கார்களின் பின் பகுதியில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் மாடல் ஆகியவற்றின் பெயர்களுக்கு அடுத்தபடியாக ட்ரிம் லெவல்களின் பெயர்கள் (Trim Level Names) பொறிக்கப்பட்டிருக்கும். இதற்கு டொயோட்டா (Toyota) நிறுவன கார்களும் விதிவிலக்கு அல்ல. ட்ரிம் லெவல்களுக்கு பெயர் வைப்பதில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு நடைமுறையை பின்பற்றி வருகின்றன.

டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த செய்தியில் டொயோட்டா நிறுவன கார்களுடைய ட்ரிம் லெவல்களின் பெயர்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம். பொதுவாக டொயோட்டா நிறுவன கார்களின் ட்ரிம் லெவல்கள் ஒரு சில எழுத்துக்களை கொண்டதாக இருக்கும். எனினும் அவை எதை குறிக்கின்றன? என்பதை புரிந்து கொள்வது பலருக்கும் கடினமான விஷயமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் இந்த செய்தியை வாசித்த பிறகு, இனி டொயோட்டா கார்களுடைய ட்ரிம் லெவல்களை புரிந்து கொள்வது மிகவும் எளிமையான விஷயமாக இருக்கும். டொயோட்டா கார்களின் ட்ரிம் லெவல்களுக்கு XLE மற்றும் XLS போன்ற பெயர்கள் வைக்கப்படுகின்றன. இந்த ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் என்ன அர்த்தம்? என்பதை தெரிந்து கொண்டால் முழு பெயரையும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதாவது E என்பது எப்போதுமே Edition என்பதை குறிக்கிறது. அதே நேரத்தில் L என்பது பெரும்பாலும் Luxury என்பதை குறிக்கிறது. ஆனால் ஒரு சில சமயங்களில் வெறும் L என்ற பெயரில் ட்ரிம் இருக்கும். அப்படியானால் அது Entry Level மாடல் ஆகும். அதாவது ஒரு காரின் ஆரம்ப நிலை மாடல். இதன் விலை குறைவாக இருக்கும் என்பது குறிப்பிட்தக்கது.

டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதே சமயம் S என்பது எப்போதுமே Sport என்பதைதான் குறிக்கிறது. அதே நேரத்தில் X என்பது பெரும்பாலான சமயங்களில் Executive என்பதை குறிக்கிறது. சில சமயங்களில் Extreme என்பதையும் இந்த X குறிக்கும். இதன்படி பார்த்தால் LE என்பது Luxury Edition என்பதை குறிக்கிறது. XLE என்பது Executive Luxury Edition என்பதை குறிக்கிறது.

டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதே நேரத்தில் SE என்பது Sport Edition என்பதை குறிக்கிறது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி L என்பது தனியாக இருந்தால் அது Entry Level மாடல் ஆகும். சரி, தற்போது உங்களுக்கு ஒரு கேள்வி. XSE என்பது எதை குறிக்கிறது? நீங்கள் கீழே வாசிக்காமல் சரியாக சொல்லி விட்டால் உங்களுக்கு தெளிவாக புரிந்து விட்டது என அர்த்தம்.

டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

Extreme Sport Edition என்பதுதான் இந்த கேள்விக்கு பதில். நீங்கள் இந்த பதிலை யோசித்திருந்தால், சரியாக புரிந்து கொண்டுள்ளீர்கள். டொயோட்டா நிறுவன தயாரிப்புகளுடைய ட்ரிம்களின் பெயர்கள் இத்துடன் முடிந்து விடவில்லை. இன்னும் இருக்கிறது. இதன்படி SR என்பது Sport Rally என்பதை குறிக்கிறது.

டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதே சமயம் SR5 என்பது Sport Rally 5-speed என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. டொயோட்டா நிறுவன கார்களில் XR மற்றும் XRS போன்ற பேட்ஜ்களையும் நீங்கள் காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்துள்ள தகவலின்படி இதில், XR என்பது Extreme Rally என்பதையும், XRS என்பது Extreme Rally Sport என்பதையும் குறிக்கிறது.

டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதே சமயம் CE என்பது Classic Edition என்பதை குறிக்கிறது. DX என்பது Deluxe என்பதையும், VE என்பது Value Edition என்பதையும் குறிக்கிறது. அதே நேரத்தில் டொயோட்டா நிறுவனத்தின் ஒரு சில கார்களில் TRD என்ற ட்ரிம் லெவலும் இருக்கும். டொயோட்டா நிறுவனத்தின் டாகோமா (Tacoma), டண்ட்ரா (Tundra), ரேவ்4 (RAV4) மற்றும் கேம்ரி (Camry) ஆகிய தயாரிப்புகளில் TRD ட்ரிம் லெவலை நீங்கள் பார்க்கலாம்.

டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் இதில் TRD என்பது எதை குறிக்கிறது? உண்மையில் இது மிகவும் எளிமையானது. Toyota Racing Development என்பதான் சுருக்கம்தான் TRD. மேலே குறிப்பிட்டுள்ள டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளின் பெயர்கள் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதுபோன்ற வாகனங்களை எல்லாம் டொயோட்டா விற்பனை செய்கிறதா? என்ற சந்தேகமும் ஏற்படலாம்.

டொயோட்டா கார்களில் உள்ள SE, XLE போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் இது உண்மைதான். இதில் ஒரு சில தயாரிப்புகள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவதில்லை. மாறாக வெளிநாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் வருங்காலங்களில் இந்திய சந்தையிலும் இவை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.

Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read