Home சினிமா செய்திகள் தல தோனியின் குட்டி ஸ்டோரி .. விஜய் டிவி பாவனாவின் தோனி ஸ்பெஷல் பாடல் | Vj bavna has sung kutty story song for M.S dhoni

தல தோனியின் குட்டி ஸ்டோரி .. விஜய் டிவி பாவனாவின் தோனி ஸ்பெஷல் பாடல் | Vj bavna has sung kutty story song for M.S dhoni

0

[ad_1]

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

உலக அளவில் பல விளையாட்டுக்கள் பிரபலமாக இருந்தாலும் பலராலும் நேசிக்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் இருந்து வருகிறது. அவ்வாறு உலக அளவில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி பல்வேறு மொழிகளில் அதை ஒளிபரப்பி வருகிறது.

சிறந்த அணியாக

சிறந்த அணியாக

இவ்வாறு கிரிக்கெட் பற்றி பேசும்போது அதில் கண்டிப்பாக இந்திய அணியை பற்றி குறிப்பிடாமல் இருக்கமுடியாது கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணி இன்றளவும் சிறப்பாக விளையாடி உலக அரங்கில் மிகச் சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது.

எதிரணிக்கு வியர்த்து

எதிரணிக்கு வியர்த்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாகவும் என்றென்றும் ரசிகர்களுக்கு கூல் கேப்டனாகவும் இருந்து வரும் எம்.எஸ் தோனி கிரிக்கெட் விளையாட்டில் யாராலும் முறியடிக்க முடியாத பல சாதனைகளை செய்துள்ளார். பேட்டிங் மற்றும் கீப்பிங்கில் சிறந்து விளங்கும் தோனி கையில் பேட்டை எடுத்தாலே எதிரணிக்கு வியர்த்து விறுவிறுக்கும்.

ப்ரைடஸ்ட் கேப்டன்

ப்ரைடஸ்ட் கேப்டன்

தோனியின் தலைமையில் 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு என இருமுறை இந்தியா உலகக் கோப்பையை வென்று கிரிக்கெட் வரலாற்றில் அனைவரையும் இந்தியாவை உற்றுநோக்க வைத்தார். மேலும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி இந்தியாவின் ப்ரைடஸ்ட் கேப்டன் என அனைவராலும் புகழப்பட்டார்.

சிஎஸ்கே கேப்டனாக

சிஎஸ்கே கேப்டனாக

இவ்வாறு இந்திய அணி விளையாடும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் தனது மாயாஜாலங்களை செய்து வந்த தோனி இந்திய அளவில் பிரபலமாக விளையாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாட்டின் சார்பாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக வலம் வந்து தமிழ்நாட்டு மக்களின் அளவுகடந்த அன்பிற்கு அதிபதி ஆனார்.

தல தோனி

தல தோனி

இவ்வாறு இந்திய அணியின் நாம் கேப்டனாக பார்த்த தோனி தற்பொழுது சிஎஸ்கே அணியின் கேப்டனாக விளையாடி எதிரணிகளை துவம்சம் செய்து தமிழக ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானார். இவ்வாறு தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான தோனியை அனைவரும் தல தோனி என அன்போடு அழைத்து வரும் நிலையில் தமிழ் திரைப்படத்துறையில் இரண்டு உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் ஒன்றாக ரசிக்கும் ஒரு நபராக எம்.எஸ் தோனி விளங்கினார்.

விஜே பாவனா

விஜே பாவனா

இவ்வாறு தோனியின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் பல்வேறு வகையில் போட்டோ மற்றும் வீடியோக்களின் மூலம் தங்களது அன்பான வாழ்த்துக்களை சொல்லி வரும் நிலையில், விஜய் டிவியின் மூலம் பலராலும் மிகப் பிரபலமாக அறியப்பட்ட தொகுப்பாளினி மற்றும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான விஜே பாவனா தல தோனிக்கு மிகப்பெரிய ரசிகை ஆவார்.

தோனியின் வாழ்க்கை

தோனியின் வாழ்க்கை

இந்நிலையில் தான் மிகவும் ரசிக்கும் நட்சத்திரங்களான தோனி மற்றும் விஜய்யை பாவனா ஒரே பாடலில் இணைத்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள திரைப்படமான மாஸ்டர் படத்தில் வரும் குட்டி ஸ்டோரி பாடலில் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறை சொல்லும் விதமாக அவரின் புகழை எழுதி பாடலாக பாடி உள்ளார்.

பாவனாவின் க்யூட்டான டான்ஸாலும்

பாவனாவின் க்யூட்டான டான்ஸாலும்

இவ்வாறு வெறித்தனமாக உருவாகியுள்ள தோனியின் குட்டி ஸ்டோரி பாடலில் தோனியின் சாதனைகளையும் அவர் தனது வாழ்க்கையில் சந்தித்து வந்த சோதனைகளையும் எடுத்து சொல்லி அனைவரும் ரசிக்கும் வண்ணம் விஜே பாவனா உருவாக்கியுள்ள இந்த பாடல் சிறந்த பாடல் வரிகளாலும் பாவனாவின் க்யூட்டான டான்ஸாலும் பார்ப்போர் அனைவரையும் மிகவும் ரசிக்க வைத்துள்ளது.

பர்த்டே ட்ரீட்டாக

பர்த்டே ட்ரீட்டாக

இது நம்ம குட்டி ஸ்டோரி, தோனியோட குட்டி ஸ்டோரி, ஹவ் ஈஸ் அவர் குட்டி ஸ்டோரி, தலையோட குட்டி ஸ்டோரி என எம்.எஸ் தோனியின் பிறந்தநாளுக்கு பர்த்டே ட்ரீட்டாக விஜே பாவனா மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி இணைந்து உருவாக்கியுள்ள இந்த பாடல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு தோனி ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

தோனிக்கு பிறந்தநாள்

தோனிக்கு பிறந்தநாள்

மேலும் இந்தப் பாடல் தளபதி விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலின் மறு வடிவமைப்பாக இருப்பதால் விஜய்யின் ரசிகர்களும் இந்த பாடலை தூக்கி வைத்து கொண்டாடியும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லியும் வைரலாகி வருகின்றனர்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here