Home தமிழ் News ஆட்டோமொபைல் நம்பவே முடியல… சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா? இத்தன நாளா தெரியாம போச்சே!

நம்பவே முடியல… சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா? இத்தன நாளா தெரியாம போச்சே!

0
நம்பவே முடியல… சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா? இத்தன நாளா தெரியாம போச்சே!

[ad_1]

நம்பவே முடியல... சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா? இத்தன நாளா தெரியாம போச்சே!

இந்தியாவில் முன்பெல்லாம் தார் ரோடுகள்தான் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது சிமெண்ட் கான்கிரீட் ரோடுகளும் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கார் மற்றும் லாரி போன்ற வாகனங்களின் விரைவான போக்குவரத்திற்கு உதவி செய்யக்கூடிய எக்ஸ்பிரஸ்வேக்களில் (Expressways), சிமெண்ட் கான்கிரீட் சாலைகளை நீங்கள் அதிகமாக காண முடியும்.

நம்பவே முடியல... சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா? இத்தன நாளா தெரியாம போச்சே!

பல்வேறு நன்மைகள் இருப்பதால்தான் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் மிகவும் முக்கியமான பிரச்னை ஒன்று மறைந்திருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அது என்ன பிரச்னை? என்பதைதான் இந்த செய்தியில் விளக்கமாக பார்க்க போகிறோம்.

நம்பவே முடியல... சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா? இத்தன நாளா தெரியாம போச்சே!

வழக்கமான தார் ரோடுகளை காட்டிலும், சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் டயர் வெடிப்பதற்கான அபாயம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக அதிவேகத்தில் சென்றால், டயர் வெடிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். அதாவது வழக்கமான தார் ரோடுகளுடன் ஒப்பிடுகையில், சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் டயருக்கு அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தும்.

நம்பவே முடியல... சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா? இத்தன நாளா தெரியாம போச்சே!

டயர்களை அவை மிக அதிகமாகவும், விரைவாகவும் சூடாக்குவதுதான் இதற்கு காரணம். குறிப்பாக சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் மிகவும் வேகமாக சென்றால், டயர்கள் விரைவாக சூடாகி விடும். எனவே சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் பயணம் செய்யும் அனைவரும், ஸ்பீடு லிமிட்டை, அதாவது வேக வரம்பை பின்பற்றுவது மிகவும் நல்லது.

நம்பவே முடியல... சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா? இத்தன நாளா தெரியாம போச்சே!

எவ்வளவு வேகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அதை காட்டிலும் அதிக வேகத்தில் பயணம் செய்தால் டயர் வெடிக்க கூடும். சரி, சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் டயர்கள் அதிகமாகவும், வேகமாகவும் சூடாவது ஏன்? என்ற சந்தேகம் தற்போது உங்களுக்கு வந்திருக்கலாம். அதற்கான காரணத்தையும் இந்த செய்தியிலேயே பார்த்து விடலாம்.

நம்பவே முடியல... சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா? இத்தன நாளா தெரியாம போச்சே!

சிமெண்ட் கான்கிரீட் சாலைகளின் மேற்பரப்பு திடமானது. தார் சாலைகளை விட அவை மிகவும் உறுதியாக காணப்படும். இந்த உறுதி தன்மை காரணமாக டயரின் ‘கான்டாக்ட் ஏரியா’ மிகவும் அதிகமாக இருக்கும். கான்டாக்ட் ஏரியா அதிகமாக இருந்தால், உராய்வும் அதிகமாக இருக்கும். உராய்வு அதிகமாக இருந்தால், அதிக வெப்பம் உருவாக்கப்படும்.

நம்பவே முடியல... சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா? இத்தன நாளா தெரியாம போச்சே!

அதிக வெப்பம் உருவாக்கப்பட்டால், டயரின் வெப்ப நிலையும் தானாகவே உயர்ந்து விடும். இதனால்தான் தார் சாலைகளை விட சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் டயர்கள் அதிகமாக வெப்பமடைகின்றன. அத்துடன் டயர் வெடிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. எனவே சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் பயணிக்கும்போது கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.

நம்பவே முடியல... சிமெண்ட் ரோட்டில் இவ்ளோ பெரிய பிரச்னை மறஞ்சிருக்கா? இத்தன நாளா தெரியாம போச்சே!

நாங்கள் ஏற்கனவே கூறியதைபோல், சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் ஏராளமான நன்மைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் வெப்பம் காரணமாக டயர் வெடிக்க கூடிய அபாயம் இருப்பது மிகவும் முக்கியமான பின்னடைவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இருந்தாலும் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளில் மிதமான வேகத்தை பின்பற்றினால், இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here