HomeSportsவிளையாட்டு செய்திகள்பயிற்சிக்கு வராத ஹர்திக் பண்டியா: தோனியுடன் நீண்ட ஆலோசனை நடத்திய பும்ரா: பாகிஸ்தானுடன் மோதலுக்கு இந்திய...

பயிற்சிக்கு வராத ஹர்திக் பண்டியா: தோனியுடன் நீண்ட ஆலோசனை நடத்திய பும்ரா: பாகிஸ்தானுடன் மோதலுக்கு இந்திய அணி தயார் | T20 WC, Ind vs Pak: Hardik skips optional training, Bumrah spends quality time with Dhoni



டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இன்று மோதலுக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ஹர்திக் பாண்டியா பயிற்சிக்கு வரவில்லை, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நீண்டநேரம் அணியின் ஆலோசகர் தோனியுடன் ஆலோசனை நடத்தினார்.

கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்திருக்கும் டி20உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இரு அணிகளும் தீவிரமாகத் தயாராகியுள்ளன.

கடந்த வரலாறு இந்திய அணிக்கே சாதகமா இருந்தாலும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள இந்திய அணி தயாராக இல்லை என்ற கணக்கில் தொடர்்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அணிக்கு வலு ேசர்க்கும் வகையில் மென்ட்டராக தோனியையும் பிசிசிஐ நியமித்துள்ளது.

இன்று மாலை போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நேற்று இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டனர். கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நீண்டநேரம் பேட்டிங் பயி்ற்சியில் ஈடுபட்டனர். ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா இருவரும் தனியாக பேட்டிங் பயிற்சியில் நீண்டநேரம் ஈடுபட்டனர்.

ஆனால், இந்தப் பயிற்சியில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா இருவர் மட்டும் பங்கேற்கவி்ல்லை. பந்துவீச்சைப் பொருத்தவரை பும்ரா பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டபின், மென்ட்டர் தோனியுடன் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார். ஷமி, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமாரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஹர்திக் பாண்டியா பயிற்சியில் ஈடுபடாதது குறி்த்து கேப்டன் விராட் கோலி கூறுகையில் “ ஹர்திக் பாண்டியா களமிறங்கும்போது குறைந்தபட்சம் 2 ஓவர்கள் வரை வீசுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.

மற்றவகையில் பந்துவீச்சுக்கு கூடுதல் வீரர் சேர்க்கப்படுவார்கள். ஆனால், பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்பமுடியாது. அவர் மேட்ச்வின்னர். அவர்கள் களத்தில் இருந்தால் ஆட்டம் எந்தத் திசையிலும் நகர்த்தக்கூடியவர்.

ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டதால், குறைந்தபட்சம் 2 ஓவர்கள் வரை வீசலாம். அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பாண்டியாவுக்கு வழங்குவோம். கூடுதல் பந்துவீ்ச்சாளர்களும் எடுப்பதால், ஹர்திக் பாண்டியா பந்துவீசாவிட்டாலும் அதற்கும் தயாராக இருக்கிறோம்.

6-வது வீரராக ஹர்திக் பாண்டியா களமிறங்கி அதை வலுப்படுத்தக்கூடியவர், அதற்கு ஓர் இரவில் திடீரென ஒரு வீரரைக் கொண்டுவர முடியாது. ஆஸ்திரேலியத் தொடரில் ஸ்பெலிஷ்ட் பேட்ஸ்மேனாக மட்டும்தான் பாண்டியாவை பயன்படுத்தினேன். 6-வது இடத்தில் ஹர்திக் பாண்டியா களமிறங்கினால், அணிக்கு என்னவிதமான பயன், மதிப்பு கிைடக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை பந்துவீசக் கூறி கட்டாயப்படுத்தமாட்டோம், அதேநேரம் ஊக்கப்படுத்தி குறைந்தபட்சம் 2 ஓவர்கள் வீசச் செய்வோம்” எனத் தெரிவித்தார்.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read