HomeSportsவிளையாட்டு செய்திகள்பாட்ரிக் ஷிக் அபார ஆட்டம்: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது செக் குடியரசு | Euro cup Czech...

பாட்ரிக் ஷிக் அபார ஆட்டம்: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது செக் குடியரசு | Euro cup Czech Republic beats Scotland in League | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


Euro-cup-Czech-Republic-beats-Scotland-in-League

யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது செக் குடியரசு.

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் செக் குடியரசு, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் செக் குடியரசு அணியின் பாட்ரிக் 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 52 வது நிமிடத்தில் பாட்ரிக் மற்றொரு கோல் அடித்தார். இறுதியில், செக் குடியரசு 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாட்ரிக் ஷிரக் ஆட்டம் அபாரமாக இருந்தது.

image

யூரோ கோப்பையின் மற்றொரு போட்டி ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்தது. இதில் இ பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து – சுலோவாகியா அணிகள் மோதின. விறுவிறுப்பான நடந்த ஆட்டத்தில் 18-வது நிமிடத்தில் சுலோவாகியா அணிக்கு முதல் கோல் கிடைத்தது. சுலோவாகியா வீரர் ராபர்ட் மேக் கோலை நோக்கி அடித்த பந்து போலந்து அணியின் கோல் கீப்பர் செஸ்னியின் மேல் பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுய கோலானது. 46-வது நிமிடத்தில் போலந்து அணி வீரர் கரோல் லினிட்டி பதில் கோல் அடித்தார்.

image

62-வது நிமிடத்தில் போலந்து அணி வீரர் கிரிஜோவியாக் எதிரணி வீரரை பவுல் செய்ததால் நடுவரால் ரெட் கார்ட் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது. 69-வது நிமிடத்தில் சுலோவாகியா வீரர் மிலன் கிரினியர் ஒரு கோல் அடித்தார். அதன்பிறகு இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் சுலோவாகியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் போலந்தை தோற்கடித்தது.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read