Home Sports விளையாட்டு செய்திகள் பிரபல ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மோசடி வலையில் சிக்காத போலி ஐபிஎஸ் | Fake IPS deluded hotel owner and enjoyed 6 lakhs worth benefits

பிரபல ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மோசடி வலையில் சிக்காத போலி ஐபிஎஸ் | Fake IPS deluded hotel owner and enjoyed 6 lakhs worth benefits

0
பிரபல ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் மோசடி வலையில் சிக்காத போலி ஐபிஎஸ் | Fake IPS deluded hotel owner and enjoyed 6 lakhs worth benefits

[ad_1]

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித். இவர் சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் பிரபல ஓட்டலின் கிளைகளை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆந்திராவைச் சேர்ந்த ராஜகுரு (வயது 32) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். 

ராஜகுரு தன்னை ஐபிஎஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஃபே வைத்து நடத்துவதற்கு உதவி செய்வதாக முகேஷ் குமார் புரோகிதிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய முகேஷ் குமார் புரோகித்திடம், ஆட்சியர் அலுவலகத்தில் கபே திறக்க அனுமதி வாங்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். 

இதன் பேரில் சென்னையில் இருந்து முகேஷ் குமார் புரோகித் கோவைக்கு புறப்பட்டு வந்தார். கடந்த ஜூன் 12ம் தேதியன்று நீலாம்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அரை எடுத்து தங்கி இருந்த ராஜ குருவை , முகேஷ் குமார் புரோகித் சந்தித்து பேசியுள்ளார். 

மேலும் படிக்க | NIGHT SHIFT செல்ல CAB-கிற்கு காத்திருந்த IT பெண்களுக்கு நேர்ந்த கதி – CCTV வீடியோ !!

அப்போது ஒன்றரை இலட்ச ரூபாய் பணத்தை ஆட்சியர் அலுவலகத்தில் கபே திறக்க அனுமதி வாங்குவதற்காக கொடுத்துள்ளார். இதையடுத்து மீண்டும் 13 ம் தேதியன்று பந்தய சாலை பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து 1 லட்ச ரூபாய் பணத்தையும், ஒரு லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் நட்சத்திர ஓட்டலுக்கான வாடகை 50 ஆயிரம் மற்றும் கோவையில் இருந்து சென்னை செல்ல விமான கட்டணம் என மொத்தம் சேர்த்து 6 லட்ச ரூபாய் பண செலவு செய்துள்ளார்.  

அதன் பின்னர் ராஜகுருவை , முகேஷ் குமார் புரோகித்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து ராஜகுரு தன்னை ஏமாற்றி 6 இலட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி இருப்பது முகேஷ் குமார் புரோகித்துக்கு தெரியவந்தது. இது குறித்து முகேஷ் குமார் புரோகித் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி 6 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் குத்திய கணவர் ; ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

zeenews.india.com

Zee News Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here