தற்போதைய கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவர் முகமது சாலா. எகிப்து நாட்டு வீரர். பிரிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் லிவர்பூல் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக அவர் விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளில் அசத்தலான இரண்டு கோல்களை போட்டுக் கொடுத்துள்ளார். அந்த இரண்டு கோல்களும் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தன.
View this post on Instagram
முதலில் கடந்த 3-ஆம் தேதி மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக ஒரு கோலை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் நேற்று Watford அணிக்கு எதிராக ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் அசத்தலான கோல் ஒன்றை அவர் பதிவு செய்திருந்தார்.
எதிரணியின் தடுப்பாட்டக்காரர்களை லாவகமாக ஏமாற்றி பந்தை வலைக்குள் தள்ளி அசத்தி இருந்தார். அதன் மூலம் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை ஆனந்தக்கடலில் மூழ்கடித்தார் அவர். இது கால்பந்தாட்ட உலகின் ஆகச்சிறந்த கோல்களில் ஒன்று எனவும் சொல்லப்பட்டு வருகிறது.