Homeதமிழ் Newsஆட்டோமொபைல்புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!


புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் தான் அதன் புதிய ஆர்சி125 மற்றும் ஆர்சி200 மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இவற்றின் விலைகள் முறையே ரூ.1.82 லட்சம் ரூ.2.09 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இவற்றை தொடர்ந்து அடுத்ததாக புதிய தலைமுறை ஆர்சி390 பைக்கை விற்பனைக்கு கொண்டுவர கேடிஎம் தயாராகி வருகிறது.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

தோற்றத்திலும், செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் புதிய கேடிஎம் ஆர்சி390 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் தான் தற்போது கேடிஎம் இந்தியா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கங்களில், ‘Racing Soon’ என்ற வார்த்தைகள் மற்றும் புதிய ஆர்சி390 பைக்கின் படத்துடன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

மேலும் பதிவில், உங்களது பந்தய உலகினில் நுழைய தயாராகுங்கள். மோட்டோஜிபி-ஆல் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட வேக மெஷின் விரைவில் இந்தியாவில் களமிறங்கவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில், புதிய தலைமுறை கேடிஎம் ஆர்சி390 பைக்குகள் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்ட போது கிடைத்திருந்த ஸ்பை படங்கள் சிலரை வெகுவாக ஏமாற்றமடைய செய்திருந்தன.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

ஏனெனில் அந்த படங்களில், மறைப்புகளை தாண்டி காட்சியளித்த பைக்கின் தோற்றம் அவ்வாறு இருந்தது. இருப்பினும் இதன் தோற்றத்தில் நமக்கு பல சந்தேகங்களும், கேள்விகளும் உள்ளன. அறிமுகத்தின்போதுதான் இவை க்ளியராகும். முக்கியமான மாற்றமாக, இரட்டை பிரோஜெக்டர் யூனிட்டிற்கு மாற்றாக சிங்கிள் எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

அதேபோல் முன்பக்க எதிர்காற்று தடுப்பு கண்ணாடி சற்று பெரியதாக்கப்பட்டிருக்க, எல்இடி டிஆர்எல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் பெட்ரோல் டேங்க், பாடி கிராஃபிக்ஸ், ஃபைரிங் மற்றும் பின்பக்க முனை பகுதி உள்ளிட்ட மற்ற பாகங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு பைக்கின் தோற்றத்தில் மட்டுமில்லாமல், காற்று இயக்கவியல் பண்பிலும் குறிப்பிடத்தக்க மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

இந்த வகையில் பைக்கின் பக்கவாட்டு பேனல்களிலும் காற்று துளைகள் புதியதாக கொடுக்கப்பட உள்ளன. மற்றொரு முக்கியமான அப்டேட்டாக, ப்ளூடூத் இணைப்புடனான புதிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை சொல்லலாம். மேலும், க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் மற்றும் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதிகள் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

புதிய கேடிஎம் ஆர்சி390-இன் டீசர் வெளியீடு!! அறிமுகம் மிக விரைவில்!

இவற்றினால் புதிய கேடிஎம் ஆர்சி390 பைக்கில் மிகவும் சவுகரியமான ரைடிங்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொலைத்தூர பயணங்களுக்கு இந்த மாற்றங்கள் ஏற்றதாக இருக்கும். இருப்பினும் ஆர்சி390-இன் ஆக்ரோஷமான பயணங்களில் எந்த மாற்றமும் இருக்காது. இதேபோன்றதான மாற்றங்கள் பைக்கின் இருக்கை உயரம் மற்றும் பின் இருக்கை பயணி கால் வைக்கும் பகுதியிலும் கொண்டுவரப்படலாம்.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read