Homeதமிழ் Newsஆட்டோமொபைல்பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா?...

பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா? சட்டம் என்ன சொல்லுது?

பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா? சட்டம் என்ன சொல்லுது?

இன்று தமிழ்நாடு முழுவதும் பேசப்படும் ஒருநபர் என்றால் அது TTF வாசன் தான். கோவையைச் சேர்ந்த இவரும் இவரது நண்பரும் சேர்ந்து பைக் சாகசங்கள் மற்றும் பைக் ரைடு செய்து அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் வெளியிட்டு வைரலாகினர். இவருக்கு இளசுகளின் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். குறிப்பாக 20 வயது இளைஞர்கள் பலர் இவரது வீடியோக்களை விரும்பி பார்க்கின்றனர்.

பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா? சட்டம் என்ன சொல்லுது?

இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளுக்காகக் கோவையில் ஒரு மீட்அப் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த மீட்அப்பிற்காக ஏராளமான மக்கள் அந்த இடத்தில் கூடினர். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. அப்பொழுது முதல் இவர் குறித்து சமூகவலைத்தளங்களில் பலர் விவாதிக்கத் துவங்கிவிட்டனர்.

பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா? சட்டம் என்ன சொல்லுது?

பலர் இவரை 2கே கிட்ஸ் எனக் கிண்டல் பதிவுகளைப் போட்ட நிலையில் இவரது பழைய வீடியோக்களை எல்லாம் இப்பொழுது எடுத்து நோண்ட ஆரம்பித்துவிட்டனர். இவர் இதற்கு முன்னர் இந்திய நேபாளம் ட்ரிப் சென்ற போது லக்னோவிலிருந்து ஆக்ராவிற்குச் செல்ல எக்ஸ்பிரஸ் ஹைவேயை பயன்படுத்தியுள்ளனர்.

எலிவேட்டட் ஹைவேயான இந்த ரோட்டில் இவர்கள் பயணம் செய்துள்ளனர்.

பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா? சட்டம் என்ன சொல்லுது?

அந்த பயணத்தில் இவர்கள் பைக்கில் சுமார் 247 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளனர். இதை அவர்கள் வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் போட்டுள்ளனர். இந்த விஷயம் தற்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் டிவிட்டரில் பலர் TTF வாசனிற்கு எதிராகப் பலர் கிளம்பியுள்ளனர். சிலர் TTF வாசன் அதிவேகத்தில் பைக் ஓட்டியதாக போலீசாரை டேக் செய்தனர்.

பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா? சட்டம் என்ன சொல்லுது?

அதில் சென்னை பெருநகர போலீசாரும் இதை நோட் செய்து வைத்திருப்பதாக ரிப்ளே செய்திருந்தனர். இந்நிலையில் அதிவேகத்தில் பைக் ஓட்டி TTF வாசன் உள்ளிட்ட சிலரை போலீசார் விரைவில் கைது செய்யவுள்ளனர். எனப் பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்த பதிவில் நாம் இவ்வளவு வேகத்தில் சென்றால் சட்டப்படி குற்றமா? இவர்கள் கைதாக வாய்ப்பு இருக்கிறதா? மோட்டார் வாகன சட்டம் என்ன சொல்கிறது காணலாம் வாருங்கள்

பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா? சட்டம் என்ன சொல்லுது?

இந்தியாவில் உள்ள வாகனங்களுக்கு மத்திய அரசு அதிகபட்ச வேகம் என்ற ஒரு விதிமுறையை வகுத்துள்ளது. அதன்படி சாலையின் தன்மையைப் பொருத்து இந்த வேகம் மாறுபடுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மாநில நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகமாக 80 கி.மீ வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ் சாலைகளில் 120 கி.மீ வேகத்திலும் செல்ல அனுமதியிருக்கிறது.

பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா? சட்டம் என்ன சொல்லுது?

TTF வாசனை பொருத்தவரை அவர் 247 கி.மீ வேகத்தில் பைக்கை ஓட்டியது வட இந்தியாவில் யமுனா ஹைவே என அழைக்கப்படும் லக்னோ-ஆக்ராவை இணைக்கும் எலிவேட்டட் எக்ஸ்பிரஸ் ஹைவேயாகும். இந்த ரோட்டில் 120 கி.மீ வேகம் வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி எக்ஸ்பிரஸ் சாலையில் அதிகபட்ச வேகத்தை 140 கி.மீ வேகமாக உயர்த்தவேண்டும் எனக் கூறி வருகிறார். அதற்கான சட்ட வரையறை இன்னும் வரவில்லை.

பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா? சட்டம் என்ன சொல்லுது?

இந்த விவகாரங்களுக்குப் பிறகு TTF வாசன் மற்றும் குழுவினர் தாங்கள் தமிழ்நாட்டில் அதி வேகமாக ஓட்டவில்லை. வெளிமாநிலத்தில் தான் ஓட்டினோம். அதுவும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் தான் இதைச் செய்தோம். தாங்கள் யாருக்கும் தவறான விஷயத்தைப் போதிக்கவில்லை என்று பேசி வருகின்றனர். ஆனால் சட்டப்படி பார்த்தால் அவர்கள் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் இந்த வேகத்தை பைக் ஓட்டியது தவறு தான்.

பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா? சட்டம் என்ன சொல்லுது?

ஆனால் இவர்கள் அதிவேகமாக பைக் ஓட்டியபோது அதிர்ஷ்டவசமாக வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் மோட்டார் வாகன சட்டப்படி இவர்களைக் கைது செய்ய முடியாது ஆனால் இவர்களுக்கு அபராதம் விதிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் இதை வீடியோ எடுத்து வெளியிடுவது மூலம் இளைஞர்களுக்குத் தவறான விஷயங்களைப் போதிப்பதாக இவரைக் கைது செய்யும் அதிகாரம் போலீசாருக்கே இருக்கிறது.

பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா? சட்டம் என்ன சொல்லுது?

ஆனால் இவர் மீது யாராவது புகார் கொடுத்தாலோ அல்லது இவர்கள் வேகமாக பைக் ஓட்டுவதால் விபத்து, உள்ளிட்ட ஏதேனும் சம்பவங்கள் நடந்திருந்தால் தமிழக போலீசாரே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இந்தியாவில் பொது மக்கள் பயன்படுத்தும் சாலையில் அரசு அனுமதிக்கப்பட்டுள்ள வேகத்தை விட அதிக வேகமாக பைக் ஓட்ட முடியாது.

பைக்கில் 247 கி.மீ வேகத்தில் பறந்த TTF வாசனை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருக்கா? சட்டம் என்ன சொல்லுது?

ஆனால் டிராக்களுக்கு மோட்டார் வாகன விதிகள் கட்டுப்படாது. அங்கு ரைடர்கள் அவர்கள் விருப்பத்திற்கு எவ்வளவு வேகத்தில் வேண்டுமானாலும் செல்லலாம். டிராக்களில் எல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக இருக்கும் என்பதால் இது ஆய்வு மற்றும் போட்டிக்காகச் செயல்படும் இடம் என்பதால் இங்கு அனுமதியிருக்கிறது. மொத்தத்தில் TTF வாசன் குழு கைதாவது போலீசார் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது.

Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read