Homeதமிழ் Newsஆட்டோமொபைல்மாருதி அறிமுகம் செய்த புதிய காருக்கு இவ்ளோ புக்கிங்கா? டாடா, ஹூண்டாய் கார்களுக்கு கடும் நெருக்கடி!

மாருதி அறிமுகம் செய்த புதிய காருக்கு இவ்ளோ புக்கிங்கா? டாடா, ஹூண்டாய் கார்களுக்கு கடும் நெருக்கடி!

மாருதி அறிமுகம் செய்த புதிய காருக்கு இவ்ளோ புக்கிங்கா? டாடா, ஹூண்டாய் கார்களுக்கு கடும் நெருக்கடி!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் 7.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாருதி அறிமுகம் செய்த புதிய காருக்கு இவ்ளோ புக்கிங்கா? டாடா, ஹூண்டாய் கார்களுக்கு கடும் நெருக்கடி!

இந்த சூழலில், அப்டேட் செய்யப்பட்ட புதிய 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (2022 Maruti Suzuki Brezza) கார் இந்திய சந்தையில் இன்று காலை (ஜூன் 30) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2022 பிரெஸ்ஸா காரின் ஆரம்ப விலையை மாருதி சுஸுகி நிறுவனம் 7.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.96 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி அறிமுகம் செய்த புதிய காருக்கு இவ்ளோ புக்கிங்கா? டாடா, ஹூண்டாய் கார்களுக்கு கடும் நெருக்கடி!

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த சூழலில், 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருக்கு முன்பதிவுகள் குவிந்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்று விட்டது. அதுவும் வெறும் 8 நாட்களில் என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி அறிமுகம் செய்த புதிய காருக்கு இவ்ளோ புக்கிங்கா? டாடா, ஹூண்டாய் கார்களுக்கு கடும் நெருக்கடி!

2022 பிரெஸ்ஸா காருக்கு மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்க தொடங்கிய முதல் 8 நாட்களிலேயே 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருப்பதை, மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் & சேல்ஸ் மூத்த நிர்வாக இயக்குனரான சசாங்க் ஸ்ரீவஸ்தவா உறுதி செய்துள்ளார்.

மாருதி அறிமுகம் செய்த புதிய காருக்கு இவ்ளோ புக்கிங்கா? டாடா, ஹூண்டாய் கார்களுக்கு கடும் நெருக்கடி!

2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில், எல்இடி பகல் நேர விளக்குகளுடன் புதிய ப்ரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சன்ரூஃப் வசதியையும் 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் பெற்றுள்ளது. பொதுவாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களில் சன்ரூஃப் வசதி வழங்கப்படாது எனும், 2022 பிரெஸ்ஸா இந்த வசதியை பெற்றிருப்பது முக்கியமான சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

மாருதி அறிமுகம் செய்த புதிய காருக்கு இவ்ளோ புக்கிங்கா? டாடா, ஹூண்டாய் கார்களுக்கு கடும் நெருக்கடி!

மேலும் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ+ ஹெச்டி இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே வசதியும், 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 40க்கும் மேற்பட்ட கனெக்டட் வசதிகளுடன் அடுத்த தலைமுறை சுஸுகி கனெக்ட், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், பின் பகுதியில் ஃபாஸ்ட் சார்ஜர்கள் (A & C டைப்), கூல்டு க்ளவ் பாக்ஸ், பின் பகுதியில் ஏசி வெண்ட்கள் என 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம்.

மாருதி அறிமுகம் செய்த புதிய காருக்கு இவ்ளோ புக்கிங்கா? டாடா, ஹூண்டாய் கார்களுக்கு கடும் நெருக்கடி!

செயல்திறனை பொறுத்தவரையில், 2022 பிரெஸ்ஸா காரில், புதிய 1.5 லிட்டர் K-சீரிஸ், ட்யூயல்-ஜெட் பெட்ரோல் இன்ஜினை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 103 பிஹெச்பி பவரையும், 137 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மாருதி அறிமுகம் செய்த புதிய காருக்கு இவ்ளோ புக்கிங்கா? டாடா, ஹூண்டாய் கார்களுக்கு கடும் நெருக்கடி!

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், ரெனால்ட் கைகர், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற கார்களுடன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா போட்டியிட்டு வருகிறது. இந்த காரின் புதிய மாடலின் வருகை, அதன் முக்கியமான போட்டியாளர்களுக்கு விற்பனையில் கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளது.

மாருதி அறிமுகம் செய்த புதிய காருக்கு இவ்ளோ புக்கிங்கா? டாடா, ஹூண்டாய் கார்களுக்கு கடும் நெருக்கடி!

பழைய மாடலுடன் ஒப்பிடும்போது பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதால், 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் இந்திய சந்தையில் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை எவ்வளவு என்பது தெரிவதற்கு முன்பாகவே, அதுவும் வெறும் 8 நாட்களில், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருப்பதால், 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன.

மாருதி அறிமுகம் செய்த புதிய காருக்கு இவ்ளோ புக்கிங்கா? டாடா, ஹூண்டாய் கார்களுக்கு கடும் நெருக்கடி!

மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்ததாக 2022 பிரெஸ்ஸா காரின் புதிய சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் வெகு விரைவிலேயே 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு அறிமுகும் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read