Homeசினிமா செய்திகள்“வள்ளிமயில்“ என் நான்கு ஆண்டு கனவு.. மேடையில் நெகிழ்ந்த இயக்குநர் சுசீந்திரன் ! | Vallimayil...

“வள்ளிமயில்“ என் நான்கு ஆண்டு கனவு.. மேடையில் நெகிழ்ந்த இயக்குநர் சுசீந்திரன் ! | Vallimayil first look launch event Director Suseendhiran speech

விஜய் ஆண்டனியின் வள்ளிமயில்

விஜய் ஆண்டனியின் வள்ளிமயில்

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் வள்ளி மயில் திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனி உடன் இணைந்து சத்யராஜ், ஃபரியா அப்துல்லா மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் வள்ளி மயில் படத்தில், தெலுங்கு நடிகர் சுனில், ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி நிஷா மற்றும் யூட்யூப் பிரபலமான ஜிபி முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் தாய் சரவணன் இணைந்து வழங்கும் வள்ளி மயில் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் வள்ளி மயில் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வள்ளி மயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இயக்குநர் சுசீந்திரன் பேசியது

இயக்குநர் சுசீந்திரன் பேசியது

இந்த நிகழ்ச்சியில் பேசிய சுசீந்திரன், இந்த படத்தின் கதையை நான்கு வருடமாக நான் எழுதி வருகிறேன். இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இந்த படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். அவர் தான் இந்த படத்தின் உயிர் என்றார்.

ஒரு நல்ல படைப்பு

ஒரு நல்ல படைப்பு

இந்த படம் அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. நடிகை கல்பனா உடைய மகள் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். கனி அகத்தியன் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். எனக்கு இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படம். இமான் கடினமான உழைப்பாளி, அவருடன் நான் 9 படங்கள் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் முழு அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். ஆக்‌ஷன், காமெடி எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக வள்ளிமயில் படம் இருக்கும் என்று சுசீந்திரன் பேசினார்.

பிரம்மாண்டமான செட்

பிரம்மாண்டமான செட்

80 களில் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய ‘வள்ளி திருமணம்’ நாடகத்தைப் மையமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், 1980ம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போல கதை இருப்பதால், சுமார் 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் 80களில் திண்டுக்கல் எப்படி இருந்ததோ அதை கண் முன் கொண்டு வரும் வகையில் செட் போடப்பட்டுள்ளது. இதனால் வள்ளிமயில் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read