Home சினிமா செய்திகள் ‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்: முக்கியமான கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே | radhika apte to play an important role in vikram veda

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்: முக்கியமான கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே | radhika apte to play an important role in vikram veda

0
‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்: முக்கியமான கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே | radhika apte to play an important role in vikram veda

[ad_1]

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கவிருக்கிறார்.

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2017-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் அனைத்து ரீமேக் உரிமைகளும் தயாரிப்பாளர் சஷிகாந்திடம்தான் உள்ளன. இந்தியில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ரீமேக் தயாரிக்கும் பணிகளையும் மேற்கொண்டார். புஷ்கர் – காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள்.

இந்தப் படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இறுதியாக சைஃப் அலி கான் – ஹ்ரித்திக் ரோஷன் இருவரும் நடிப்பது உறுதியானது. விஷால் சேகர் இசையமைக்கின்றனர்.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. தற்போது தமிழில் மாதவன் கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வேதாவை பிடிக்க நினைக்கும் காவல்துறை அதிகாரி விக்ரமின் மனைவியாக ஒரு பக்கமும், வேதாவின் வழக்கறிஞராக ஒரு பக்கமும் என இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இது. இதற்காக ராதிகா ஆப்தேவிடம் பேச்சுவார்த்தை முடிந்து மற்ற விஷயங்கள் விரைவில் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here