Home Sports விளையாட்டு செய்திகள் "விரக்தியின் உச்சத்தில் இருக்கிறோம்; தவறாக சித்தரிக்க வேண்டாம்"- இலங்கை பயிற்சியாளர் பதில்

"விரக்தியின் உச்சத்தில் இருக்கிறோம்; தவறாக சித்தரிக்க வேண்டாம்"- இலங்கை பயிற்சியாளர் பதில்

0
"விரக்தியின் உச்சத்தில் இருக்கிறோம்; தவறாக சித்தரிக்க வேண்டாம்"- இலங்கை பயிற்சியாளர் பதில்

[ad_1]

நாங்கள் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியின்போது வெற்றி வாய்ப்பு இருந்தபோதும் அதனை கோட்டை விட்டது இலங்கை கிரிக்கெட் அணி,. இதனால் விரக்தியடைந்த பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் பெவிலியினில் கடும் அதிருப்தியுடன் காணப்பட்டார். பின்பு மைதானத்துக்குள் சென்ற அவர் கேப்டன் ஷனகாவுடன் வாக்குவாதம் செய்தார். அப்போதும் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார். இந்தக் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

image

இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்ணால்டு “பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இடையிலான உரையாடல் பெவிலியன் உள்ளே நடக்க வேண்டுமே தவிர, மைதானத்தில் நடக்க கூடாது” என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு மிக்கி ஆர்த்தர் பதிலும் அளித்திருந்தார். அதில் “நாங்கள் வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகவே சந்திக்கிறோம். இப்போது நிறைய கற்றும் வருகிறோம். நானும் ஷனகாவும் இந்த அணியை வளர்க்க பாடுபடுகிறோம்” என்றார்.

image

மேலும் “நாங்கள் இருவருமே இப்போது விரக்தியின் உச்சத்துக்கு சென்றுவிட்டோம். நாங்கள் நினைத்ததை முடிக்க முடியவில்லை. நீங்கள் பார்த்தது ஆரோக்கியமான உரையாடல்தான். அதில் தவறேதும் இல்லை, அதை தவறாகவும் சித்தரிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார் மிக்கி ஆர்த்தர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here