Homeதமிழ் Newsஆட்டோமொபைல்விற்பனையில் இந்தியாவின் டாப்-5 ஹேட்ச்பேக் கார்களுள் டாடா பஞ்ச்!! மாருதி வேகன்ஆர் இம்முறை முதலிடம்!

விற்பனையில் இந்தியாவின் டாப்-5 ஹேட்ச்பேக் கார்களுள் டாடா பஞ்ச்!! மாருதி வேகன்ஆர் இம்முறை முதலிடம்!

விற்பனையில் இந்தியாவின் டாப்-5 ஹேட்ச்பேக் கார்களுள் டாடா பஞ்ச்!! மாருதி வேகன்ஆர் இம்முறை முதலிடம்!

இந்தியாவில் குறிப்பாக முதல்முறையாக காரை வாங்குவோரில் பெரும்பாலானோர் ஹேட்ச்பேக் கார்களையே தேர்வு செய்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நம் நாட்டில் ஹேட்ச்பேக் கார்களை பட்ஜெட் விலையில் காம்பெக்ட் அளவில் வாங்குவோரும் உள்ளனர், அதேநேரம் மிகவும் சவுகரியமான பயணத்திற்காக விசாலமான உட்புற கேபின் உடன் வாங்குவோரும் உள்ளனர்.

விற்பனையில் இந்தியாவின் டாப்-5 ஹேட்ச்பேக் கார்களுள் டாடா பஞ்ச்!! மாருதி வேகன்ஆர் இம்முறை முதலிடம்!

அதுமட்டுமின்றி நம் இந்திய சாலைகளுக்கும் ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த கார்களே மிகவும் ஏற்றதாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவலாக கருத்து ஒன்று உள்ளது. இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை என்றாலே மாருதி சுஸுகி நிறுவனத்தின் கையே எப்போதும் ஓங்கி இருக்கும். இந்த நிலை கடந்த 2021 டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

விற்பனையில் இந்தியாவின் டாப்-5 ஹேட்ச்பேக் கார்களுள் டாடா பஞ்ச்!! மாருதி வேகன்ஆர் இம்முறை முதலிடம்!

கடந்த ஆண்டின் இறுதி மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 ஹேட்ச்பேக் கார்களில் 6 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையதாகவும், 3 டாடா ஹேட்ச்பேக்குகளும் அடங்குகின்றன. மீதி 1 ஹேட்ச்பேக் கார் மட்டுமே ஹூண்டாய் நிறுவனத்துடையதாக உள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் முதல் 4 இடங்களில் மாருதி சுஸுகியின் தயாரிப்புகளே உள்ளன.

விற்பனையில் இந்தியாவின் டாப்-5 ஹேட்ச்பேக் கார்களுள் டாடா பஞ்ச்!! மாருதி வேகன்ஆர் இம்முறை முதலிடம்!

இந்த வகையில் முதலிடத்தில் மாருதி சுஸுகியின் உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் உள்ளது. ஹேட்ச்பேக் கார் என்று மட்டுமில்லாமல், மொத்தமாக கடந்த டிசம்பரில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காராகவும் விளங்கும் வேகன்ஆர் கடந்த மாதத்தில் மொத்தம் 19,729 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2020 டிசம்பரில் விற்கப்பட்ட வேகன்ஆர் கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 11.56% அதிகமாகும்.

விற்பனையில் இந்தியாவின் டாப்-5 ஹேட்ச்பேக் கார்களுள் டாடா பஞ்ச்!! மாருதி வேகன்ஆர் இம்முறை முதலிடம்!

ஏனெனில் அந்த மாதத்தில் 17,684 வேகன்ஆர் கார்களையே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் வரிசையில் 2020 டிசம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த டிசம்பரில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஒரே ஹேட்பேக் மாடல் மாருதி சுஸுகி வேகன்ஆர் ஆகும். மற்றவை அனைத்தின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.

விற்பனையில் இந்தியாவின் டாப்-5 ஹேட்ச்பேக் கார்களுள் டாடா பஞ்ச்!! மாருதி வேகன்ஆர் இம்முறை முதலிடம்!

இரண்டாவது இடத்தில் மற்றொரு பிரபலமான மாருதி சுஸுகி காரான ஸ்விஃப்ட் 15,661 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இருப்பினும் 2020 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 18,131 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை கிட்டத்தட்ட 13.62% குறைந்துள்ளது. மொத்த ஹேட்ச்பேக் கார்களில் வேகன்ஆர் மட்டும் 20.84 சதவீதத்தை ஆக்கிரமித்திருக்க, ஸ்விஃப்ட் 16.54%ஐ பெற்றுள்ளது.

விற்பனையில் இந்தியாவின் டாப்-5 ஹேட்ச்பேக் கார்களுள் டாடா பஞ்ச்!! மாருதி வேகன்ஆர் இம்முறை முதலிடம்!

இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் மாருதி சுஸுகியின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான பலேனோ உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 14,458 பலேனோ கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் விற்பனையும் 2020 டிசம்பர் மாதத்தில் 18 ஆயிரத்தை வெற்றிக்கரமாக கடந்திருந்தது. அந்த மாதத்தில் மொத்தம் 18,030 பலேனோ கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.

விற்பனையில் இந்தியாவின் டாப்-5 ஹேட்ச்பேக் கார்களுள் டாடா பஞ்ச்!! மாருதி வேகன்ஆர் இம்முறை முதலிடம்!

இதன்படி பார்க்கும்போது, பலேனோ கார்களின் விற்பனை 19.81% குறைந்துள்ளது. இவை மூன்று தான் எஸ்யூவி, செடான் என அனைத்து கார்களையும் சேர்த்து கடந்த மாதத்தில் இந்திய சந்தையில் அதிகம் விற்கப்பட்ட கார்களின் லிஸ்ட்டிலும் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. 2020 டிசம்பரில் 18,140 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு ஒட்டுமொத்தமாக அதிகம் விற்கப்பட்ட காராக விளங்கிய மாருதி ஆல்டோ மாடல் கடந்த மாதத்தில் வெறும் 11,170 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விற்பனையில் இந்தியாவின் டாப்-5 ஹேட்ச்பேக் கார்களுள் டாடா பஞ்ச்!! மாருதி வேகன்ஆர் இம்முறை முதலிடம்!

ஐந்தாவது இடத்தில் டாடா மோட்டார்ஸின் சமீபத்திய அறிமுகமான பஞ்ச் உள்ளது. மைக்ரோ-எஸ்யூவி என்றும் அழைக்கப்படுகின்ற பஞ்ச் கடந்த மாதத்தில் மட்டும் 8,008 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது இடத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸின் ஐ10 நியோஸ் 6,151 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் 2020 டிசம்பரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஹூண்டாய் ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

விற்பனையில் இந்தியாவின் டாப்-5 ஹேட்ச்பேக் கார்களுள் டாடா பஞ்ச்!! மாருதி வேகன்ஆர் இம்முறை முதலிடம்!

7வது, 8வது மற்றும் 9வது இடங்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விற்பனை எண்ணிக்கைகளுடன் மாருதி சுஸுகியின் செலிரியோ (5,656 யூனிட்கள்), எஸ்-பிரெஸ்ஸோ (5,150) மற்றும் டாடா மோட்டார்ஸின் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் (5,009) கார்கள் உள்ளன. இவை மூன்றின் விற்பனை எண்ணிக்கையும் 2020 டிசம்பரிலும் இதே போல் 6,600- 6,800 யூனிட்கள் என்ற அளவில் இருந்தது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 10வது இடத்தில் டாடாவின் மலிவான ஹேட்ச்பேக் காரான டியாகோ உள்ளது.

Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read