Home Sports விளையாட்டு செய்திகள் விளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக்கும் இந்திய ஹாக்கி அணியும் | sports story

விளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக்கும் இந்திய ஹாக்கி அணியும் | sports story

0

[ad_1]

ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் அதிக முறை தங்கப் பதக்கம் வென்ற நாடு இந்தியா. இதுவரை இந்திய ஹாக்கி அணி 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

1928-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டி இடம்பெற்ற முதல் ஆண்டிலேயே இந்திய அணி, அதில் தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த ஒலிம்பிக்கில், இந்தியா மொத்தம் 29 கோல்களை அடித்தது. இதில் தியான் சந்த் மட்டும் 14 கோல்களை அடித்தார்.

1932-ம் ஆண்டு, அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் இந்திய அணி 24-1 என்ற கோல் கணக்கில் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது.

இதில் தியான் சந்த் சகோதரரான ரூப் சந்த் 10 கோல்களை அடித்தார். எளிதாக வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நிலையில், இப்போட்டியின் நடுவே இந்திய அணியின் கோல்கீப்பரான ரிச்சர்டு ஆலன், ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக்கொண்டு இருந்தார்.

இந்த நேரத்தை பயன்படுத்தித்தான் இந்த போட்டியில் அமெரிக்க வீரர்கள், தங்களது ஒரே கோலை அடித்தனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 1956-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி நெதர்லாந்தை வென்றது.

இந்த போட்டியில் இந்திய வீரரான பல்பீர் சிங் 5 கோல்களை அடித்து சாதனை படைத்தார். ஒலிம்பிக்கில் ஹாக்கி இறுதிப்போட்டியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச கோலாகும் இது.

இந்தியாவுக்கு அதிக ஹாக்கி வீரர்களை உருவாக்கிக் கொடுத்த பெருமை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சன்சர்பூர் கிராமத்துக்கு உண்டு.

இந்த கிராமத்தை சேர்ந்த 14 பேர் இதுவரை இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் விளையாடியுள்ளனர்.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் 1980-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இருந்து, இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பங்கேற்றுவருகிறது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here