Tuesday, June 15, 2021
HomeNews Feedsதமிழ் News16,627 கோடி நஷ்டமடைந்த அமெரிக்க விநியோக நிறுவனம்... என்னவாகும் திரைப்பட வணிகம்? | What are...

16,627 கோடி நஷ்டமடைந்த அமெரிக்க விநியோக நிறுவனம்… என்னவாகும் திரைப்பட வணிகம்? | What are the Restrictions on theatres in America


திரைப்பட விநியோக நிறுவனங்களுக்கும் 25% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்குவது பெரிய பிரச்னையாக இல்லை. வார இறுதிகள், பெரிய வெளியீடுகள் இல்லாத பெரும்பாலான நாட்களில் அவ்வளவு கூட்டத்துடன் திரையரங்குகள் இயங்குகின்றனவாம். ‘எதுவும் இல்லாததுக்கு இதுவே மேல்’ என்பதாகவே இருக்கிறது அவர்களது மனநிலை.

ஆனால், இத்தனை மாதங்கள் செயல்படாமல் சந்தித்த இழப்பை இந்த 25% பார்வையாளர்களை வைத்து எப்படி சரிக்கட்டப்போகின்றன திரையரங்குகளும், விநியோக நிறுவனங்களும் என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும், இந்தக் கட்டுப்பாடுகள் எவ்வளவு நாட்கள் தொடரும் என்பதையும் யாராலும் கணிக்கமுடியவில்லை. சிலர், இது இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என்கின்றனர். அப்படியானால் பெரிய திரைப்பட ஸ்டூடியோக்கள் இன்னும் அதிகமாக OTT பக்கம் நகரும் என்கின்றனர்.

திரையரங்கு

திரையரங்கு
FLICKR

திரையரங்க அனுபவமே கூட்டமாகப் படம் பார்ப்பதுதான். அது இல்லாமல் திரையரங்குகளால் பார்வையாளனை ஈர்க்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. முதல் நாளில் அதிகம் பேர் பார்த்தால்தான், படம் நன்றாக இருக்கும்போது அது பலரது காதுகளையும் எட்டும். சினிமாவின் தொன்றுதொட்ட ‘Word of mouth’ கணக்கு இதுதான். இதுவும் இந்தப் புதிய கட்டுப்பாடுகளால் என்னவாகும் என்று தெரியவில்லை.

மொத்தமாக திரையரங்குகள் விரைவில் திறக்கப்படப்போகின்றன. திரைப்படங்கள் வெளியாகப்போகின்றன என்பது மட்டுமே நல்ல செய்தி. அது லாபகரமாக இருக்குமா, மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா, திரையரங்குகளின் எதிர்காலம் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's