2021ல் பிரபலமான இந்தியப் படங்கள்: முதலிடத்தில் மாஸ்டர் | Vijay’s Master tops IMDb list of most popular Indian films in 2021

0
18
2021ல் பிரபலமான இந்தியப் படங்கள்: முதலிடத்தில் மாஸ்டர் | Vijay’s Master tops IMDb list of most popular Indian films in 2021


பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபியின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்கள், பிரபலமான படங்கள் உள்ளிட்ட பல பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் தற்போது 2021ஆம் ஆண்டு, இதுவரை வெளியான இந்தியப் படங்களில் பிரபலமான படங்கள் என்னென்ன என்கிற கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

இந்தப் பட்டியலில் திரைப்படங்களோடு, வெப் சீரிஸின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஐஎம்டிபி ப்ரோ தளத்தின் தரவுகள், அந்தந்த திரைப்படங்களின் பக்கங்கள் எத்தனை முறை இந்தியாவில் இருக்கும் பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளன ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் த்ரிஷ்யம் 2, கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸும் இதில் இடம்பெற்றுள்ளது.

2021 (இதுவரை) பிரபலமான திரைப்படங்கள்/வெப் சீரிஸ் முழு பட்டியல்

1. மாஸ்டர்

2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)

3. தி வைட் டைகர்

4. த்ரிஷ்யம் 2

5. நவம்பர் ஸ்டோரி

6. கர்ணன்

7. வக்கீல் ஸாப்

8. மஹாராணி (வெப் சீரிஸ்)

9. க்ராக்

10. தி கிரேட் இண்டியன் கிச்சன்

இந்தப் படங்கள்/வெப் சீரிஸ் வெளியான அடுத்த 4 வாரங்களில், அந்தந்த படைப்புகளில் பக்கங்கள் அதிகப் பார்வைகளை ஈர்த்துள்ளது. இந்த அத்தனை படைப்புகளுமே 7 மற்றும் அதற்கு அதிகமான மதிப்பீடைப் பெற்றுள்ளன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here