2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

0
10
2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மீண்டும் இந்தியா ஆட்டோமொபைல் துறை மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டு வருவது கடந்த ஜூலை மாத கார்கள் விற்பனை எண்ணிக்கையை பார்க்கும்போது தெரிய வருகிறது.

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

இம்முறை அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் வரிசையில் முதல் நான்கு இடங்களை மாருதி சுஸுகி நிறுவனம் பிடித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்களை தவிர்த்து வேறெந்த நிறுவனத்தின் காரும் இந்த டாப்-10 லிஸ்ட்டில் இல்லை.

Rank Model July 2021 July 2020 Growth (%)
1 Maruti Wagonr 22,836 13,515 69
2 Maruti Swift 18,434 10,173 81.2
3 Maruti Baleno 14,729 11,575 27.2
4 Maruti Ertiga 13,434 8,504 58
5 Hyundai Creta 13,000 11,549 12.5
6 Maruti Alto 12,867 13,654 -5.7
7 Maruti Vitara Brezza 12,676 7,807 62.3
8 Maruti Dzire 10,470 9,046 15.7
9 Tata Nexon 10,287 4,327 137.7
10 Maruti Eeco 10,057 8,501 18.3

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

முதலிடத்தில் மாருதியின் உயரம் அதிகம் கொண்ட ஹேட்ச்பேக் காரான வேகன்-ஆர் மாடல் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 22,836 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் 13,515 வேகன்ஆர் கார்களையே மாருதி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

இந்த வகையில் இந்த உயரமான ஹேட்ச்பேக் காரின் விற்பனையில் 69 சதவீத வளர்ச்சியை மாருதி சுஸுகி நிறுவனம் கண்டுள்ளது. இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் மற்றொரு பிரபலமான மாருதி ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட் 18,434 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

வேகன்ஆரை போன்று ஸ்விஃப்ட்டின் விற்பனையிலும் சுமார் 81.2% வளர்ச்சியை 2020 ஜூலை உடன் ஒப்பிடுகையில் மாருதி நிறுவனம் அடைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் 10,173 ஸ்விஃப்ட் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

மூன்றாம் இடத்தை மாருதி பலேனோ தனதாக்கியுள்ளது. மாருதி சுஸுகியின் பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காராக டாடா அல்ட்ராஸ் உடன் நேரடியாக போட்டியிடும் பலேனோ கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 14,729 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

2020 ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் தற்போதைய எண்ணிக்கை சில ஆயிரங்கள் மட்டுமே அதிகமாகும். நான்காவது இடத்தில் நம் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக மாருதி எர்டிகா எம்பிவி உள்ளது. வழக்கமாக இந்த இடத்தில் ஆல்டோ அல்லது டிசைர் கார் இருக்கும்.

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

ஆனால் இம்முறை எர்டிகா உள்ளது. இந்தியாவின் தற்போதைய நம்பர்.1 எம்பிவி கார் மாருதி எர்டிகா என்பதற்கு இதுவே உதாரணம். கடந்த ஜூலையில் 13,434 எர்டிகா கார்கள் விற்கப்பட்டுள்ளன. 2020 ஜூலையில் 8,504 எர்டிகா கார்களே விற்பனை செய்யபட்டு இருந்தன.

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

எம்பிவி பிரிவில் மாருதி எர்டிகா எப்படியோ அதேபோல் எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் க்ரெட்டா. சரியாக 13 ஆயிர யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் என்ற பெயரை பெறுவது மட்டுமின்றி, இந்த டாப்-10 லிஸ்ட்டில் ஹூண்டாய் நிறுவனம் நுழைவதற்கு காரணமாகவும் இருக்கிறது.

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

2020 ஜூலை மாதத்திலும் இதனை காட்டிலும் சில நூறு க்ரெட்டா கார்கள் மட்டுமே குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு 2020 ஏப்ரல், மே மாதங்களை தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

இவற்றிற்கு அடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டுவரும் மாருதி ஆல்டோவும், மாருதியின் காம்பெக்ட்-எஸ்யூவி காரான விட்டாரா பிரெஸ்ஸாவும் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக முறையே 12,867, 12,676 என உள்ளன.

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

இதில் ஆல்டோவின் விற்பனை எண்ணிக்கை 2020 ஜூலையை காட்டிலும் 5.7 சதவீதம் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது. ஆல்டோவை தவிர இந்த 10 கார்களில் வேறு எதன் விற்பனையும் 2020 ஜூலை காட்டிலும் கடந்த ஜூலை மாதத்தில் குறையவில்லை.

2021 ஜூலையில் அதிகம் விற்பனையான கார் எதுவென்று தெரியணுமா? டாப்-10 கார்கள்!!

இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி மூன்று இடங்களில் மாருதி டிசைர் காம்பெக்ட் செடான் (10,470), டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி (10,287) மற்றும் மாருதி ஈக்கோ (10,057) என்பவை உள்ளன. இதில் நெக்ஸானின் விற்பனை எண்ணிக்கை, குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த காரில் கொண்டுவரப்படும் அப்கிரேட்களினால் 2020 ஜூலையை காட்டிலும் சுமார் 137.7% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here