2021 ஹோண்டா அமேஸ் காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு! ஆனா இது ஹோண்டாவுக்கு தெரியுமா!

0
14
2021 ஹோண்டா அமேஸ் காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு! ஆனா இது ஹோண்டாவுக்கு தெரியுமா!

2021 ஹோண்டா அமேஸ் காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு! ஆனா இது ஹோண்டாவுக்கு தெரியுமா!

ஹோண்டா நிறுவனம் மிக விரைவில் அதன் புதுப்பிக்கப்பட்ட அமேஸ் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான கார் மாடல்களில் அமேஸூம் ஒன்று என கூறலாம். பல ஆண்டுகளாக நிறுவனத்தின்கீழ் விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் ஒன்றாகவும் இது இருக்கின்றது.

2021 ஹோண்டா அமேஸ் காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு! ஆனா இது ஹோண்டாவுக்கு தெரியுமா!

இத்தகைய ஓர் சிறப்புமிக்க கார் மாடலையே ஹோண்டா நிறுவனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. இதன் அறிமுகம் வரும் ஆகஸ்டு 17ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

2021 ஹோண்டா அமேஸ் காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு! ஆனா இது ஹோண்டாவுக்கு தெரியுமா!

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஹோண்டா கார் விற்பனையாளர்கள் சிலர் ஹோண்டா அமேஸ் காருக்கு புக்கிங் பதிவை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கியிருக்கின்றது.

2021 ஹோண்டா அமேஸ் காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு! ஆனா இது ஹோண்டாவுக்கு தெரியுமா!

குறிப்பிட்ட சில டீலர்கள் மட்டுமே இப்பணியில் களமிறங்கியிருக்கின்றனர். அப்டேட் செய்யப்பட ஹோண்டா அமேஸ் காரில் புதுப்பித்தலின் அடிப்படையில் கணிசமான புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா அமேஸ் கடந்த 2018ம் ஆண்டில் இருந்து சந்தையில் விற்பனையில் இருந்து வருகின்றது.

2021 ஹோண்டா அமேஸ் காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு! ஆனா இது ஹோண்டாவுக்கு தெரியுமா!

இந்த நிலையிலேயே புதுப்பிக்கப்பட்ட மாடலைக் கொண்டு இந்தியர்களைக் கவரும் முயற்சியில் ஹோண்டா களமிறங்கியிருக்கின்றது. இருப்பினும், புதுப்பித்தல்கள் ஹோண்டா அமேஸின் தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆகையால் புதிய அம்சங்கள் சேர்ப்பு வேலை மட்டுமே இதில் செய்யப்பட்டுள்ளது.

2021 ஹோண்டா அமேஸ் காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு! ஆனா இது ஹோண்டாவுக்கு தெரியுமா!

டிசைன்:

அந்தவகையில், முழு எல்இடி மின் விளக்குகள் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இத்துடன், புதுப்பிக்கப்பட்ட பம்பர், காரின் உட்புறம் மற்றும் இருக்கைகள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், சில சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் விரைவில் அறிமுகமாக இருக்கும் அமேஸ் காரில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2021 ஹோண்டா அமேஸ் காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு! ஆனா இது ஹோண்டாவுக்கு தெரியுமா!

எஞ்ஜின்:

2021 ஹோண்டா அமேஸ் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் பெட்ரோல் எஞ்ஜின் 1.2 லிட்டர் ஐ-விடிஇசி ரகமாகும். இது அதிகபட்சமாக 90 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

2021 ஹோண்டா அமேஸ் காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு! ஆனா இது ஹோண்டாவுக்கு தெரியுமா!

இதேபோன்று அமேஸ் கார் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும். இது அதிகபட்சமாக 110 எச்பி மற்றும் 200 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதே எஞ்ஜின் சிவிடி தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வில் வரும்போது 80 எச்பி மற்றும் 160 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

2021 ஹோண்டா அமேஸ் காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு! ஆனா இது ஹோண்டாவுக்கு தெரியுமா!

ஹோண்டா அமேஸ் கார் இந்தியாவில் மாருதி சுசுகி டிசையர், டாடா டிகோர், ஹூண்டாய் அவுரா மற்றும் ஃபோர்டு அஸ்பயர் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் இருந்து வருகின்றது. இவற்றிற்கே மேலும் டஃப் கொடுக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட மாடலை விரைவில் விற்பனைக்கு களமிறக்கும் பணயில் ஹோண்டா களமிறங்கியிருக்கின்றது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here