3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை தானம் செய்யும் மாருதி சுசுகி… எந்த மாநிலத்திற்கு தெரியுமா?…

0
27
3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை தானம் செய்யும் மாருதி சுசுகி… எந்த மாநிலத்திற்கு தெரியுமா?…

3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை தானம் செய்யும் மாருதி சுசுகி... எந்த மாநிலத்திற்கு தெரியுமா?...

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளர்களில் ஒருவரான மாருதி சுசுகி, ஆக்சிஜன் பிஎஸ்ஏ ஜெனரேட்டர் உற்பத்தியாளர்களுடன் இணைந்து மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை கட்டமைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை தானம் செய்யும் மாருதி சுசுகி... எந்த மாநிலத்திற்கு தெரியுமா?...

முழுக்க முழுக்க இலாப நோக்கமற்ற முறையில் இப்பணியில் மாருதி சுசுகி நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. கோவிட்-19 இரண்டாம் அலை பரவலில் இந்தியா, பெரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றது. உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால் பல உயிர்கள் இறந்திருக்கின்றன.

3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை தானம் செய்யும் மாருதி சுசுகி... எந்த மாநிலத்திற்கு தெரியுமா?...

இந்த நிலையிலேயே அரசுகளுக்குக் கை கொடுக்கும் விதமாக மாருதி சுசுகி நிறுவனம் ஆக்சிஜன் பிஎஸ்ஏ ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் பணியில் களமிறங்கியது. இந்தியாவில், மிக குறைந்தளவிலேயே ஆக்சிஜன் பிஎஸ்ஏ ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை தானம் செய்யும் மாருதி சுசுகி... எந்த மாநிலத்திற்கு தெரியுமா?...

இந்த உண்மை நிலையைக் கண்டறிந்த மாருதி சுசுகி, உடனடியாக களத்தில் இறங்கியது. தொடர்ந்து, ஏற்கனவே இத்துறையில் கொடிக்கட்டி பறந்து வரும் ஜேபிஎம்எல், எஸ்கேஎச் மெட்டல் மற்றும் மதர்சன் உள்ளிட்ட பிஎஸ்ஏ உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை கட்டமைக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியது.

3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை தானம் செய்யும் மாருதி சுசுகி... எந்த மாநிலத்திற்கு தெரியுமா?...

இதன் விளைவாக தற்போது மூன்று புதிய ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை அது உருவாக்கியிருக்கின்றது. அனைத்தும் ஹர்யானா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஆக்சிஜன் ஜெனரேட்டர்களையே மாநிலத்தின் முதலமைச்சர் மனோகர் லால் கத்தர், பயன்பாட்டிற்கு திறந்து வைக்க இருக்கின்றார்.

3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை தானம் செய்யும் மாருதி சுசுகி... எந்த மாநிலத்திற்கு தெரியுமா?...

ஆக்சிஜன் பிஎஸ்ஏ ஜெனரேட்டர்களை உருவாக்குவதோடு நிறுத்திக் கொள்ளலாம் அவற்றைக் கண்கானிப்பதற்காக தனி குழு ஒன்றையும் மாருதி சுசுகி தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குழு சில மாதங்கள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கும் ஆக்சிஜன் ஜெனரேட்டர்களைக் கண்கானிக்கும்.

3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை தானம் செய்யும் மாருதி சுசுகி... எந்த மாநிலத்திற்கு தெரியுமா?...

மாருதி சுசுகி மருத்துவமனை

மாருதி சுசுகி நிறுவனம் பன்முக மருத்துவம் வசதிக் கொண்ட மருத்துவமனையை குஜராத்தின் அகமதபாத் மாவட்டத்தில் உள்ள சீதாபூரில திறந்து வைத்திருக்கின்றது. 126 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை தற்போது கோவிட் சிறப்பு மருத்துவமனையாக செயல்படத் தொடங்கியிருக்கின்றது.

3 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை தானம் செய்யும் மாருதி சுசுகி... எந்த மாநிலத்திற்கு தெரியுமா?...

சுமார் 50 படுக்கைகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக மாருதி கூறுகின்றது. இதனை இன்னும் பல மடங்கு உயர்த்தும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றது. இந்த மருத்துவமனையில் அவசர கால சிகிச்சை, தாய்-சேய் மருத்துவம், இருதய பராமரிப்பு, கண் பராமரிப்பு, ஈஎன்டி, தீக்காயங்களுக்கான பிரிவு என பன்முக சேவை வழங்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here