3 இளம் இந்திய வீரர்களுக்கு அழைப்பு: இங்கிலாந்து செல்லும் அந்த வீரர்கள் யார்? | Suryakumar Yadav, Prithvi Shaw and Jayant Yadav going to England as replacements: BCCI official

0
13
3 இளம் இந்திய வீரர்களுக்கு அழைப்பு: இங்கிலாந்து செல்லும் அந்த வீரர்கள் யார்? | Suryakumar Yadav, Prithvi Shaw and Jayant Yadav going to England as replacements: BCCI officialஇங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணியில் 3 வீரர்கள் காயத்தால் விலகியதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய அணியிலிருந்து 3 இளம் வீரர்கள் இங்கிலாந்து புறப்படுகின்றனர்.

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்நாட்டு அணியுடன் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிரன்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது.

ஆனால், பயிற்சியின் போது இந்திய வீரர்கள் ஷுப்மான் கில், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் 3 பேரும், டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் போட்டியின் போது முழங்கையில் காயம் ஏற்பட்டு இதில் ஷூப்மான் கில் காயமடைந்து தொடரிலிருந்து விலகினார். இங்கிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தனர்.

1627122386756

இந்த 3 வீரர்களுக்குப் பதிலாக எந்த 3 வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்று பிசிசிஐ வாரியம் ஆலோசித்து வந்தநிலையில் இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள தவண் தலைமையிலான இந்திய அணியிலிருந்து 3 வீரர்களை இலங்கை அனுப்ப பிசிசிஐ வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ இங்கிலாந்து பயணத்தில் கில், ஆவேஷ்கான், சுந்தர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு தொடரிலிருந்து விலகியுள்ளனர். இவர்கள் 3 பேருக்குப் பதிலாக இலங்கையில் உள்ள இந்திய அணியிலிருந்து 3 வீரர்கள் இங்கிலாந்து அனுப்பப்பட உள்ளனர்.

இதில் பிரித்வி ஷாவும், சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவும் செல்கின்றனர். டெஸ்ட் போட்டிக்கு முதல்முறையாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடர் முடிந்தவின் இவர்கள் 3 பேரும் இங்கிலாந்து புறப்படுவார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” எனத் தெரிவித்தார்

1627122412756

இலங்கைக்கு எதிரான தொடரில் பிரித்வி ஷாவின் ஃபார்ம் தேர்வாளர்ளுக்கு மனநிறைவைத் தந்துள்ளதையடுத்து, மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து 3 வீரர்கள் சென்றாலும் தனிமைப்படுத்துதலுக்குப் பின்புதான் அணியில் இணைய முடியும். ஆதலால், 2-வது டெஸ்ட் போட்டியில்தான் 3 வீரர்களும் இடம் பெற வாய்ப்புள்ளது.

சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவ் பந்துவீச்சு ஆல்ரவுண்டர். ஜெயந்த் யாதவ் தேர்வு செய்யப்பட்டால், அஸ்விந், ரவிந்திர ஜடேஜா இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் சேர்க்கப்படலாம். ரஹானேவுக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால், அந்த காயம் குணமாகாதநிலையில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here