37லட்ச ரூபா பைக்கின் டெலிவரி பணியை தொடங்கியது ஹோண்டா! இனி இந்த பைக்கை சாலையில் பார்ப்பது சுலபம்!

0
14
37லட்ச ரூபா பைக்கின் டெலிவரி பணியை தொடங்கியது ஹோண்டா! இனி இந்த பைக்கை சாலையில் பார்ப்பது சுலபம்!

37லட்ச ரூபா பைக்கின் டெலிவரி பணியை தொடங்கியது ஹோண்டா! இனி இந்த பைக்கை சாலையில் பார்ப்பது சுலபம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் தனது உலக புகழ்பெற்ற கோல்டு விங் டூர் ரக மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த இருசக்கர வாகனத்திற்கு ஆரம்ப விலையாக ரூ. 37,20,342 என நிர்ணயிக்கப்பட்டது.

37லட்ச ரூபா பைக்கின் டெலிவரி பணியை தொடங்கியது ஹோண்டா! இனி இந்த பைக்கை சாலையில் பார்ப்பது சுலபம்!

இது மேனுவல் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் கோல்டு விங்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இதன் டிசிடி வெர்ஷன் ரூ. 39.19 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைக்கிறது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் மட்டுமே ஆகும். இத்தகைய உச்சபட்ச விலைக் கொண்ட பைக்கின் டெலிவரி பணிகளையே ஹோண்டா இந்தியாவில் தொடங்கியுள்ளது.

37லட்ச ரூபா பைக்கின் டெலிவரி பணியை தொடங்கியது ஹோண்டா! இனி இந்த பைக்கை சாலையில் பார்ப்பது சுலபம்!

ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கை தனது பிக்விங் ஷோரூம் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த ஷோரூமானது பிரத்யேகமாக பிரீமியம் தர பைக்குகளை மட்டுமே சந்தைப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

37லட்ச ரூபா பைக்கின் டெலிவரி பணியை தொடங்கியது ஹோண்டா! இனி இந்த பைக்கை சாலையில் பார்ப்பது சுலபம்!

தொடர்ந்து, கோல்டு விங் பைக்கை நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வந்தது. கொண்டு வரப்பட்ட அனைத்து யூனிட்டுகளுமே வெறும் 24 நேரத்தில் விற்று தீர்ந்திருக்கின்றன. அதாவது, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குள்ளாக அனைத்து கோல்டு விங் பைக்கின் யூனிட்டுகளுக்கும் புக்கிங் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

37லட்ச ரூபா பைக்கின் டெலிவரி பணியை தொடங்கியது ஹோண்டா! இனி இந்த பைக்கை சாலையில் பார்ப்பது சுலபம்!

இந்த பைக் சிபியூ வாயிலா இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்படுகின்றது. எனவேதான் இதன் விலை சற்று கூடுதலாக உள்ளது. இந்த பைக்கில் 1,833 சிசி திறன் கொண்ட ஃப்ளாட்-சிக்ஸ், லிக்யூடு கூல்டு பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

37லட்ச ரூபா பைக்கின் டெலிவரி பணியை தொடங்கியது ஹோண்டா! இனி இந்த பைக்கை சாலையில் பார்ப்பது சுலபம்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 124.7 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது ஓர் சிறிய எஞ்ஜின் கொண்ட காருக்கு இணையான திறனாகும். இத்தகைய திறன் கொண்ட பைக்கின் டெலிவரியையே ஹோண்டா இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது.

37லட்ச ரூபா பைக்கின் டெலிவரி பணியை தொடங்கியது ஹோண்டா! இனி இந்த பைக்கை சாலையில் பார்ப்பது சுலபம்!

இந்த பைக்கில் எக்கசக்க சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், கார்களில் இருப்பதைப் போல ஆடியோ சிஸ்டம், 7 இன்ச் அளவு கொண்ட டிஎஃப்டி வண்ண திரை, நேவிகேஷன் வசதி, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ தொழில்நுட்பம், பொத்தான் வாயிலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்கிரீன், ஸ்மார்ட் கீ ஆபரேஷன், நான்கு விதமான ரைடிங் மோட்கள் என பல பிரீமியம் தர சிறப்பம்சங்கள் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

37லட்ச ரூபா பைக்கின் டெலிவரி பணியை தொடங்கியது ஹோண்டா! இனி இந்த பைக்கை சாலையில் பார்ப்பது சுலபம்!

தொடர்ந்து, பாதுகாப்பு வசதியாக ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம், ஐடிலிங் ஸ்டாப் வசதி போன்றவையும் ஹோண்டா கோல்டு விங் பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன. இதன் பெட்ரோல் டேங்க் 21.1 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here