Monday, November 29, 2021
Homeசினிமா செய்திகள்62 வது பிறந்தநாள் கொண்டாடும் நாகர்ஜுனா... வாழ்த்தும் பிரபலங்கள் | Celebrities wish Nagarjuna for...

62 வது பிறந்தநாள் கொண்டாடும் நாகர்ஜுனா… வாழ்த்தும் பிரபலங்கள் | Celebrities wish Nagarjuna for his 62nd birthday


bredcrumb

Heroes

oi-Mohana Priya S

|

ஐதராபாத் : மறைந்த தெலுங்கு முன்னணி நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவின் மகனான நாகர்ஜுனா, சென்னையில் தான் பிறந்தார். கல்லூரி படிப்பை ஆரம்பத்தில் ஐதராபாத்திலும், பிறகு சென்னை அண்ணா பல்கலைகழகத்திலும் இன்ஜினியரிங் படித்தார்.

62 வது பிறந்தநாள் கொண்டாடும் நாகர்ஜுனா… வாழ்த்தும் பிரபலங்கள் | Celebrities wish Nagarjuna for his 62nd birthday

1984 ல் டைரக்டர் ராமநாயுடுவின் மகளும், நடிகர் வெங்கடேஷின் தங்கையுமான லட்சுமி டகுபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாக சைதன்யா என்ற மகன் உள்ளார். பிறகு நடிகை அமலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நாகர்ஜுனா. இவர்களுக்கு அகில் என்ற மகன் உள்ளார்.

1967 ல் சுதிகுண்டலு என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நடத்திரமாக அறிமுகமான நாகர்ஜுனா, 1986 ல் விக்ரம் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தியில் புகழ்பெற்ற நடிகராக திகழும் நாகர்ஜுனா 100 க்கும் மேற்பட்ட படங்களில் லீட் ரோலில் நடித்துள்ளார். சில படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார். தற்போது பிக்பாளு் தெலுங்கு நிகழ்ச்சியை நாகர்ஜுனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஐதராபாத்தில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

நடிகர், தயாரிப்பாளர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர், தொழிலதிபர் என பல திறமைகளை கொண்டுள்ள நாகர்ஜுனா இன்று தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அனில் கபூர், சிரஞ்ஜீவி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், குஷ்பு உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாகர்ஜுனாவுடன் இருக்கும் பழைய ஃபோட்டோ ஒன்றை பதிவிட்டுள்ள அனில் கபூர், இதை விட மோசமாக முடி வளர்த்த நாட்கள் கிடையாது. ஹாப்பி பர்த் டே நாகர்ஜுனா. எப்போதும் உங்களின் சிரிப்பும், பாசிடிவ் எண்ணங்களும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். அந்த ஃபோட்டோவில் அனில் கபூர் சிறிய முடியுடனும், நாகர்ஜுனா நீண்ட முடியுடனும் உள்ளனர்.

Wild Dog படத்தின் ஸ்டில்களை பகிர்ந்துள்ள தியா மிர்சா, கிங்கிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லோரும் உங்களை கிங் என ஏன் சொல்கிறார்கள் என இப்போது தான் தெரிகிறது. அவரின் நல்ல மனம், அனைவரையும் புரிந்து வைத்திருத்தல், பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பது, ஆர்வம், வாழ்க்கையிலும் வேலையிலும் குழந்தை தனமான சுறுசுறுப்பு ஆகியவை தான் என குறிப்பிட்டுள்ளார்.

நாகர்ஜுனா தற்போது பங்காருராஜு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாக சைதன்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஸ்டில்லை வெளியிட்டு ரம்யா கிருஷ்ணனும் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

கையில் அரை டசன் படங்கள்… பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா… கடுப்பாகும் முன்னணி நடிகைகள்!கையில் அரை டசன் படங்கள்… பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா… கடுப்பாகும் முன்னணி நடிகைகள்!

சமந்தா பதிவிட்டுள்ள வாழ்த்தில், உங்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதையை விளக்க வார்த்தைகளே இல்லை. ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் இன்றும் என்றும் நீங்கள் வாழ எனது வாழ்த்துக்கள். மனிதன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக விளங்கும் நாகர்ஜுனா மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

English summary

Nagarjuna celebrates his 62nd birthday today. Many celebrities from the film industry have been congratulating him on Twitter for this. Anil Kapoor, Chiranjeevi, Samantha, Ramya Krishnan, Khushbu and many others have congratulated.Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Best wired earphone under 1000 rupees get realme buds sony earphone boat bass...

इयरफोन एक ऐसी एसेसरी हैं जो ज़्यादातर लोग अपनी डिवाइसेस के साथ यूज करते हैं. बात करें ट्रू वायर्ड इयरफोन की तो ज़्यादातर...