Saturday, July 24, 2021
Homeதமிழ் Newsஆரோக்கியம்8 Thottakkal Hero's new movie; Here is the update | 8 தோட்டாக்கள்...

8 Thottakkal Hero’s new movie; Here is the update | 8 தோட்டாக்கள் பட ஹீரோவின் புதிய படம்


எட்டு தோட்டாக்கள், ஜீவி, கேர் ஆப் காதல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்த நடிகர் வெற்றி.  இவரின் புதிய படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது.

நடிகர் வெற்றி (Actor Vetri) நடிக்கும் இந்த படத்திற்க்கு பிரனிஷ் இண்டர்நேஷனல் சார்பில் சேலம் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கிறார். தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷாம் இயக்குகிறார். இந்த படம் ஒரு திரில்லர் ஜானரை மையமாக வைத்து சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை சொல்லக்கூடிய படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.  

ALSO READ | பண மாலை அணிந்து மகளுடன் போஸ் கொடுக்கும் வனிதா

தடம் (Thadam) படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து அசத்தி அனைவரின் மனதிலும் இடம் பிடித்த வித்யா பிரதீப் மற்றும் புதுமுகம் விஸ்மியா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா விஜயக்குமார் (Vanitha Vijayakumar) நடிக்கிறார். ஜே.கே.ஆர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்திற்க்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைக்கிறார். 

இந்நிலையில் இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதற்கிடையில் நேற்று மட்டும் கோலிவுட்டில் 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு பூஜை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

ALSO READ | மீண்டும் காதலில் சிக்கிக்கொண்டாரா வனிதா விஜயகுமார்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

அன்று வீரர்.. இன்று வாத்தியார்.. இந்திய அணியில் மீண்டும் ராகுல் டிராவிட் ராஜ்ஜியம்!

இந்திய கிரிக்கெட் அணி என்றாலே சட்டென நினைவுக்கு வரும் ஜாம்பவான்களில் ஒருவர் ராகுல் டிராவிட். வீரர், கேப்டன், விக்கெட் கீப்பர் என பல ரோல்களை இந்திய அணிக்காக கச்சிதமாக செய்து கொடுத்தவர்....

Today's news

Latest offer's