Home Sports விளையாட்டு செய்திகள் 85 பந்துகளில் 125 ரன்கள் விளாசல்.. வங்கதேசத்தை எளிதில் வென்றது இங்கிலாந்து

85 பந்துகளில் 125 ரன்கள் விளாசல்.. வங்கதேசத்தை எளிதில் வென்றது இங்கிலாந்து

0
85 பந்துகளில் 125 ரன்கள் விளாசல்.. வங்கதேசத்தை எளிதில் வென்றது இங்கிலாந்து

[ad_1]

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்து 124 ரன்களை 20 ஓவர்களில் எடுத்தது. 125 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. 

image

இங்கிலாந்துக்காக ஜேசன் ராய் மற்றும் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பட்லர் 18 ரன்களில் வெளியேறினார். ஜேசன் ராய் 61 ரன்களை குவித்தார். டேவிட் மலான் (28 ரன்கள்) மற்றும் பேர்ஸ்டோ (8 ரன்கள்) களத்தில் இருந்தனர். 14.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இங்கிலாந்து அணி இலக்கை அடைந்தது. 

இங்கிலாந்து அணி இடம் பிடித்துள்ள குரூப் 1-இல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் மாதிரியான அணிகள் இடம் பிடித்துள்ளன. அதனால் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவது யார் என்ற போட்டி கடுமையாக உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பதிவு செய்து நெட் ரன் ரேட்டிலும் முன்னிலை காட்டியுள்ளது. இது இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற பெரிய அளவில் கைகொடுக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு சூப்பர் 12 சுற்றில் ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நமீபியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here