Home Sports விளையாட்டு செய்திகள் 9 சர்வதேச கால்பந்து இறுதிப் போட்டியில் நடுவர்.. சாதனை படைத்த ஜான் குய்பர்ஸ்.. யார் இவர்?

9 சர்வதேச கால்பந்து இறுதிப் போட்டியில் நடுவர்.. சாதனை படைத்த ஜான் குய்பர்ஸ்.. யார் இவர்?

0
9 சர்வதேச கால்பந்து இறுதிப் போட்டியில் நடுவர்.. சாதனை படைத்த ஜான் குய்பர்ஸ்.. யார் இவர்?

[ad_1]

ஒன்பது சர்வதேச கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றியவர் என்ற சாதனையை கால்பந்து நடுவர் ஜான் குய்பர்ஸ் படைத்துள்ளார்.

சர்வதேச கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸி, நெய்மர் போன்ற விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டு திறமையின் மூலம் ஜாம்பவான்களாக திகழ்பவர்கள். ஆனால், களத்தில் இவர்களை கட்டுப்படுத்துவதோடு, சிறப்பான நல்ல தீர்ப்பை வழங்கி ஆட்டத்தை நேர்த்தியோடு கொண்டு செல்லும் பணி களத்தில் நடுவராக பணியாற்றுபவரின் கையில்தான் இருக்கிறது.

கால்பந்து போட்டியில் நடுவராக செயல்பட உடல் தகுதியும் திறமையும் வேண்டும். ஒரு சர்வதேச கால்பந்து போட்டியில் ஒரு விளையாட்டு வீரர் 5 முதல் 7 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடுகிறார் அல்லது ஒரு சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் 9 முதல் 12 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடுகிறார் என்றால், ஒரு கால்பந்து நடுவர் 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடியாக வேண்டும். சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்பட இந்த தகுதியை நடுவர்கள் நிரூபித்தே ஆகவேண்டும்.

image

கால்பந்து விளையாட்டில் சர்வதேச அளவில் எத்தனையோ போட்டிகளில் நடுவராக பணியாற்றினாலும் இறுதிப்போட்டியில் நடுவராக பணியாற்றுவது கவுரவம் என்றே சொல்ல வேண்டும். நடந்து முடிந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டதன் மூலம் ஒன்பது சர்வதேச கால்பந்து போட்டிகளின் இறுதிப் போட்டியில் நடுவராக செயல்பட்டவர் என்ற பெருமையை பெற்றுள்ள நடுவர் ஜான் குய்பர்ஸ் பற்றி விரிவாக பார்க்கலாம்.

1973ஆம் ஆண்டு நெதர்லாந்தில் பிறந்த ஜான் குய்பர்ஸ் தனது அப்பா நடத்திவந்த சூப்பர் மார்க்கெட்டை சிறப்பாக நடத்தி பல மால்கள், மற்றும் சலூன்கள் மூலம் கால்பந்து நடுவர்களில் அதிக பணம் படைத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரான இவர், 2006 முதல் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) லிஸ்டெட் பேனலில் இருக்கிறார். இதில், தகுதியும் திறமையும் நிறைந்த நடுவர்கள் இடம்பெற்றுள்ள எலைட் பேனலில் 2009 முதல் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் நடுவராக செயல்பட்டார். அதேபோல், 21 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றியுள்ளார். இதையடுத்து 2011ல் நடைபெற்ற சூப்பர் கப் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடுவராக பங்கேற்றுள்ளார். 2013ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் நடுவாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற யூரோப்பா கால்பந்து லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

image

இதையடுத்து 2014-ல் நடைபெற்ற சாம்பியல் லீக், 2017-ல் நடைபெற்ற கொரியன் கால்பந்து போட்டி மற்றும் 2018-ல் நடைபெற்ற யூரோப்பா லீக் கால்பந்து போட்டி ஆகிய 8 சர்வதேச கால்பந்து போட்டிகளின் இறுதிப் போட்டியில் நடுவராக செயல்பட்டுள்ள இவர், இந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்த போட்டியின் இறுதிப் போட்டியில் நடுவராக செயல்பட்டு, சர்வதேச கால்பந்து போட்டிளின் இறுதிப் போட்டியில் அதிகமுறை பணியாற்றிய நடுவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மைக்கேல் வாட்ரூட் 6 போட்டிகளிலும், கொலினா 4 போட்டிகளிலும், ஹவ்வார்டு வெப் மற்றும் மர்க்குஸ் மெர்க் ஆகியோர் தலா 3 போட்டிகளிலும் ஆன்டர்ஸ் ப்ரிஸ்க் 2 இரண்டு போட்டிகளிலும் நடுவர்களாக பணியாற்றியுள்ளர்.

சர்வதேச கால்பந்து போட்டியில் நடுவராக செயல்படுவது சிறப்பு, ஆனால் இறுதிப் போட்டியில் நடுவராக செயல்படுவது மிகச்சிறப்பு. 9 சர்வதேச கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் நடுவராக செயல்பட்டு சாதனை படைப்பது மிக மிகச் சிறப்பு, இந்த சாதனை சாதரணமாக வந்துவிடாது. இதற்கென இவர்களுக்கு பல தேர்வுகளும் உண்டு. கால்பந்து விதிமுறைகள் தொடர்பான தேர்வுகளில் எல்லாம் இவர்கள் தேர்ச்சியடைய வேண்டும். ஒரு சர்வதேச போட்டிக்கு செல்வதற்கு முன்பாக உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த போட்டியில் அவர் நடுவராக செயல்பட முடியும். பிஃபா பேனலில் இருந்தாலும் ஒவ்வொரு 6 மாதமும், ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் அவர் தனது உடல் தகுதியை நிரூபித்துக்காட்ட வேண்டும். அதேபோல போட்டியின்போது நடுவர் கொடுக்கக் கூடிய தீர்ப்பு மற்றும் போட்டியை எப்படி கொண்டு செல்கிறார் என்ற அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான நடுவரை தேர்வு செய்வார்கள். இப்படி நடுவராக தேர்வாவது சாதாரண விசயம் அல்ல, மிகவும் கடினமான ஒன்று.

கால்பந்து தவிர மற்ற எந்தப் போட்டிகளில் வேண்டுமானாலும் நடுவர்களை தொப்பையோடு பார்க்கலாம். ஆனால், கால்பந்து நடுவர்களில் தொப்பையோடு இருப்பவரையோ, அல்லது உடல் தகுதி இல்லாதவர்களையோ நடுவர்களாக பார்க்கவே முடியாது. கால்பந்து போட்டியில் ஒரு விளையாட்டு வீரரை கூட உடல் தகுதி இல்லாமல் அனுபவத்தின் அடிப்படையில் விளையாட வைக்கலாம். ஆனால், கால்பந்து போட்டியில் நடுவராக பணியாற்றுபவர் கட்டாயம் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடியே ஆகவேண்டும்.

image

என்னதான் வீடியோ துணை நடுவர் இருந்தாலும் நடுவரின் முடிவுதான் இறுதியானது. பந்தோடு 22 வீரர்களையும், துணை நடுவர், மாற்று ஆட்டக்காரர்கள் மற்றும் பார்வையாளர்களையும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு கால்பந்து நடுவருக்கு உண்டு என்றால் அது மிகையில்லை. விளையாட்டு வீரர்களிடம் கோபத்தைக் காட்ட வேண்டிய இடத்தில் காட்டி, சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து எச்சரிக்க வேண்டிய இடத்தில் எச்சரித்து தண்டனை கொடுக்க வேண்டிய இடத்தில் தண்டனை கொடுத்து போட்டியை எந்தவித சண்டை சச்சரவு இல்லாமல் முடிக்க வேண்டிய பொறுப்பு நடுவரின் கையில்தான் இருக்கிறது. இதுபோன்ற திறமையான நடுவர்களுக்கு மட்டுமே சர்வதேச கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here