Home சினிமா செய்திகள் actor Rahman cycling from Chennai to Pondicherry – தமிழ் News

actor Rahman cycling from Chennai to Pondicherry – தமிழ் News

0
actor Rahman cycling from Chennai to Pondicherry – தமிழ் News

[ad_1]

சினிமா நட்சத்திரங்கள் பலரும் உடற்பயிற்சி மற்றும் வொர்க் அவுட் விஷயத்தில் தனி அக்கறை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சைக்கிளிங் செய்வதில் நடிகர் ஆர்யா, சரத்குமார், விஜய் போன்ற நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காகவும் இதுபோன்ற சைக்கிளிங் நிகழ்ச்சிகள் அவ்வபோது நடத்தப்படுகிறது.

அந்த வரிசையில் தற்போது நடிகர் ரகுமானும் இணைந்து இருக்கிறார். உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுக்காக அவர் தற்போது சென்னை முதல் பாண்டிச்சேரி வரை கிட்டத்தட்ட 110 கிலோ மீட்டர் சைக்கிளிங் சென்றிருக்கிறார். தனது நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் சிறந்த நடிகராக வலம் நடிகர் ரகுமான் கடந்த 1983 ஆம் ஆண்டு மலையாள படமான “கூடுவிட“ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமனார். ஆனால் தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை “புது புது அர்த்தங்கள்” படத்தில் நடித்த ரகுமானையே இன்றைக்கும் விரும்புகின்றனர்.

அந்த வகையில் சிறந்த நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் இவர் தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்“ திரைப்படத்திலும் இணைந்து இருக்கிறார். இதைத்தவிர “துப்பறிவாளன் 2“, “பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடு சாட் பண்ணு“ போன்ற சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here