Monday, September 26, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

Actress Poorna aka Shamna Kasim announces her Marriage with businessman | வருங்கால கணவரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்திய நடிகை பூர்ணா


தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடிகை பூர்ணா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். சினிமாவுக்காக பூர்ணா என பெயர்வைத்துக் கொண்ட அவரின் உண்மையான பெயர் சாம்னா கசிம். தமிழில் பரத் நடிப்பில் வெளியான ’முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு கந்தக்கோட்டை, காப்பான், ஆடுபுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

Poorna

மேலும் படிக்க | மீண்டும் பாச மழை பொழிந்த எஸ்.கே- அருண் விஜய்.. விக்ரமன் படமாக மாறிய ஹரி படம்!

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் பூர்ணா, அடிக்கடி போட்டோஷூட் நடித்து புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். இந்நிலையில், லேட்டஸ்டாக தன்னுடைய வருங்காலக் கணவரை ரசிகர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வருங்கால கணவருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, என் வாழ்வின் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். பூர்ணாவின் வருங்கால கணவர் துபாயில் தொழிலபதிராக இருக்கிறார். அவரது பெயர் சானித் ஆசிப் அலி.

PoornaHusband

அண்மையில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் நடைபெற்று திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமண தேதி குறிக்கப்பட்டிருந்தாலும் இப்போதைக்கு பூர்ணா அறிவிக்கவில்லை. விரைவில் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கோலிவுட்டில் திருமண லிஸ்டில் இப்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது நயன்தாராவின் திருமணம் தான். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஆதி மற்றும் நிக்கிகல் ராணி ஜோடி அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்தனர். அந்த லிஸ்டில் விரைவில் இணைய இருக்கிறார் பூர்ணா. 

மேலும் படிக்க | நயன்தாரா திருமணம்… தல, தளபதிக்கு அழைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Today's Feeds

Actor Vikram Speaks About Aishwarya Rai in ponniyin Selvan Audio Launch | ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவே இல்லை – விக்ரம் சோகம்

Actor Vikram Speaks About Aishwarya Rai in ponniyin Selvan Audio Launch...

0
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில்...

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading