Homeதமிழ் Newsஆரோக்கியம்Actress Samantha dance for one song in Allu arjuns pushpa movie

Actress Samantha dance for one song in Allu arjuns pushpa movie


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘புஷ்பா’.  இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது.  இயக்குனர் சுகுமார் கேட்டுக்கொண்டதற்கிணங்க நடிகை சமந்தா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

ALSO READ ரிலீசுக்கு பிறகும் சர்ச்சையில் சிக்கிய ‘மாநாடு’!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவிற்கு இந்த ஒரு பாடலுக்கு நடனமாட ஒன்றரை கோடி சம்பளம் கொடுக்கப்பட்டள்ளதாக கூறப்படுகிறது.  தென்னிந்திய திரையுலகிலேயே ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது சமந்தாவிற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.  சமீபத்தில் இப்படத்தில் இருந்து  வெளியான ‘சாமி சாமி’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.  ஏற்கனவே சுகுமார் இயக்கத்தில் ‘ரங்கஸ்தலம்’ என்ற படத்தில் சமந்தா நடித்ததையடுத்து இந்த படத்தில் நடனமாடியுள்ளார்.

samantha

இதேபோல சில நடிகைகளும் பல படங்களில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளனர்.  அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்-2’ வில் ஒரு குத்துப் பாட்டிற்கு நடிகை அஞ்சலி நடனமாடியுள்ளார்.  ‘ஷாஜகான்’ படத்தில் விஜயுடன் ஒரு குத்துப்பாட்டிற்கு நடிகை மீனா நடனமாடியுள்ளார்.  அதேபோல ‘யூத்’ படத்தில் விஜய்யுடன் நடிகை சிம்ரன் ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார்.  மேலும் ‘நெஞ்சினிலே’ படத்தில் விஜய் உடன் ரோஸ் நடிகை ரோஜா ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார்.  ‘எதிர்நீச்சல்’ படத்தில் நயன்தாரா கார்த்திகேயனுடன் ஒரு குத்துப் பாடலில் நடனமாடியுள்ளார்.

ALSO READ சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் முன்னாள் காதலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read