Homeசினிமா செய்திகள்Ajith in valimai second single and trailer release date - தமிழ் News

Ajith in valimai second single and trailer release date – தமிழ் News


தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் அடுத்தடுத்த புரமோஷன் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ‘வலிமை’ திரைப்படத்தின் 2வது சிங்கிள் பாடலின் புரமோ இன்று இரவு 7 மணிக்கு வெளியாகலாம் என்றும் இந்த பாடல் நாளை வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் ‘வலிமை’ படத்தின் டிரெய்லர் வரும் 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து ‘வலிமை’ திரைப்படத்தின் அப்டேட்கள் வந்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்களால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read