Homeசினிமா செய்திகள்ajith kumar: ப்ளீஸ், என்னை 'தல'னு கூப்பிடாதீங்க: அஜித் குமார் - please dont call...

ajith kumar: ப்ளீஸ், என்னை ‘தல’னு கூப்பிடாதீங்க: அஜித் குமார் – please dont call me thala: ajith kumar


ஹைலைட்ஸ்:

  • ரசிகர்களுக்கு அஜித் கோரிக்கை
  • தல என்று அழைக்காதீர்கள்- அஜித் குமார்

அஜித்தை ரசிகர்கள் அனைவரும் அன்புடன் தல என்றே அழைத்து வருகிறார்கள். இந்நிலையில் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என அஜித் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
பெரும் மரியாதைக்குரிய ஊடக, பெது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்,
அஜித்குமார் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து #AjithKumar என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. அஜித்தின் அறிக்கையை பார்த்த ரசிகர்களோ, இனிமேல் தலனு கூப்பிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா புகார்: விஜய் சேதுபதி படத்திற்கு சிக்கல்



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read