Homeதமிழ் Newsஆரோக்கியம்Ajith Shalini Love Anniversary Viral Photo Released By Shamlee | அஜித் -...

Ajith Shalini Love Anniversary Viral Photo Released By Shamlee | அஜித் – ஷாலினியின் காதலுக்கு வயது 23..!


நடிகர் அஜித் – ஷாலினி தம்பதி காதலிக்க ஆரம்பித்து 23 ஆண்டுகள் ஆவதை ஷாலினியின் தங்கையும், நடிகையுமான ஷாமிலி இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த நட்சத்திர தம்பதியின் காதல் கதையை தெரிந்து கொள்ளலாம்.

file image

குழந்தை நட்சத்திரமான ஷாலினி தமிழில்  நாயகியாக காதலுக்கு மரியாதை படத்தில் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதன் தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து வந்த ஷாலினி நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

மேலும் படிக்க | மீண்டும் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் படங்கள்!

நடிப்பு எவ்வளவு முக்கியமோ அதே போல படிப்பும் முக்கியம் என நினைத்த ஷாலினி முதலில் இந்த படத்தில் நடிக்க தயங்கினாராம். ஆனால் அஜித் படிப்புக்கு தொந்தரவு இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திடலாம் என வாக்குறுதி அளித்ததால் அவரும் ஓகே சொல்லியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஷாலினியிடம் மிகுந்த அன்புடன் நடந்து கொண்ட அஜித் அவரை காதலிக்கத் தொடங்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் அமர்க்களம் பட இயக்குனர் சரண் பேசுகையில், படப்பிடிப்பில் ஷாலினியை அஜித் எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பார் என்றும், ஆரம்பத்தில் அதை ஷாலினி கண்டுகொள்ளவில்லை என்றும் பேசி இருப்பார். 

file image

ஆரம்பம் முதலே ஷாலினி மீது காதல் கொண்ட அஜித் படப்பிடிப்பு முடிவதற்குள் அதனை அவரிடம் சொல்லியுள்ளார். அதன்பிறகு ஷாலினியும் ஓகே சொல்ல, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். முன்னணி நடிகையாக வலம் வந்த ஷாலினி திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு நோ சொல்லி விட்டார். ஆனாலும் அவருக்கு பேட்மிண்டன் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் என்பதால், மாநில அளவில் பல போட்டிகளில் அவர் விளையாட உத்வேகம் அளித்தார் அஜித்குமார்.

இந்த காதல் ஜோடிக்கு 2008-ம் ஆண்டு அழகிய பெண் குழந்தையும், அதன்பிறகு 2015-ம் ஆண்டு மகன் பிறந்தான். மகளுக்கு அனொஷ்கா, மகனுக்கு ஆத்விக் என பெயரிட்டனர். எப்போதும் லைம் லைட்டில் இருந்து விலகியே இருக்கும் அஜித்குமார் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவாராம். ஆண்டுக்கு 6 மாதங்கள் குடும்பத்துடனும், மீதமுள்ள 6 மாதங்கள் படப்பிடிப்புக்காகவும் செலவிடுவாராம் அஜித்குமார். ஷாலினி கர்ப்பமாக இருந்த போதும், வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தாலும் அடிக்கடி மனைவியை வந்து சந்தித்து செல்வாராம் அஜித்குமார்.குடும்பம் வேறு, வேலை வேறு என்பதில் தெளிவாக இருப்பார் அஜித். 

மேலும் படிக்க | ஓடிடிக்கு வரும் புது ரூல்ஸ்: இனி நினைச்சதெல்லாம் பாக்கமுடியாதாம்!

இந்நிலையில் ஷாலினியின் தங்கை ஷாமிலி இன்ஸ்டாவில் அஜித், ஷாலினியின் ரொமாண்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 23 ஆண்டுகளாக ஒன்றாக இருப்பாதாக எழுதியுள்ளார். ஆம், அஜித்-ஷாலினியின் காதலுக்கு வயது 23 ஆண்டுகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

 

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

காவேரி ப்ரியம் டாக்டர் என்பதை தவறவிட்டார். ஜித்தி தில் மானே நாவில் மோனாமி மற்றும் இதுதான்...

ஜித்தி தில் மானே நா, ராணுவ பயிற்சி அகாடமியில் கேடட் கதாபாத்திரத்தில் காவேரி ப்ரியம் நடித்தார், இதில் அவர் ஷலீன் மல்ஹோத்ராவுடன் ஜோடியாக நடித்தார். ...