Thursday, July 29, 2021
Homeதமிழ் Newsஆரோக்கியம்Ajith's wife Shalini to make a comeback after 20 years in this...

Ajith’s wife Shalini to make a comeback after 20 years in this mega movie | Actress Shalini: 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வருகிறாரா ஷாலினி அஜித்?


சென்னை: ஷாலினி அஜித் பிரபலமான நடிகையாக இருந்தபோதே அஜித்தை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்துவிலகினார். 2001 ஆம் ஆண்டில் பிரியாத வரம் வேண்டும் படத்தில் பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் தான் அவர் இறுதியாக நடித்த படம். 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சிறு வயதிலேயே தனது நடிப்பாலும், சுட்டித்தனத்தாலும், அழகாலும் திரையுலகையே கட்டிப் போட்டவர் ஷாலினி. பேபி ஷாலினி என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே இல்லை என்ற அளவுக்கு பிரபலமானவர்.

குழந்தை நட்சத்திரமாக சக்கைபோடு போட்ட பேபி ஷாலினி, வளர்ந்தபிறகு, இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அலைபாயுதே திரைப்படத்தில் கதாநாயாகியாக அறிமுகமானார். அலைபாயுதே திரைப்படத்தில் ஆர் மாதவனுக்கு ஜோடியாக களம் இறங்கிய ஷாலினி, கதாநாயகியாக நடித்த அனைத்து திரைப்படங்களுமே வெற்றி திரைப்படம் தான். 

அஜித் குமாருடன் இணையாக நடித்தபோது, இருவருக்கும் காதல் ஏற்பட, நடிப்புத்துறையில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். 

ALSO READ | பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு: Viral ஆகும் Aishwarya Rai புகைப்படம்

திருமணமாகி 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷாலினி அஜித் மீண்டும் அடுத்த இன்னிங்சுக்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது. மீண்டும் இயக்குநர் மணிரத்னமே ஷாலினியை திரையில் களம் இறக்குவதாக கூறப்படுகிறது. மணிரத்தினத்தின் (Mani Ratnam)  பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஷாலினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்.
இந்த செய்தி ஷாலியின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தல அஜித்தின் ரசிகர்களுக்கும் விருந்தாக இருக்கும்.

 
பிரபல எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) நாவல் மிகவும் பிரசித்தி பெற்றது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய நிர்வாகியான பெரிய பழுவேட்டையாரின் மனைவி நந்தினியின் கதாபாத்திரத்தையும், நந்தினியின் தாய் ஊமை ராணி மந்தாகினி தேவியின் கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று கூறப்படுகிறது. 

பிற்காலத்தில் ராஜ ராஜ சோழன் என்று பிற்காலத்தில் பெயர் பெற்ற அருள்மொழிவர்மனின் கதையை அடிப்படையாக கொண்டு எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படம் பல ஆண்டுகளாக அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகரித்திருக்கிறது. மணிரத்தினத்தின் திரைப்படத்தில் ஏற்கனவே விக்ரம், மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் நடித்துள்ளனர். 

இயக்குநர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் 2022 இல் வெளியாகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

ALSO READ | ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடியாக கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's