Monday, November 29, 2021
Homeசினிமா செய்திகள்AKS - 66: காதலுக்காக எதுவும் செய்யலாமா? காயத்ரியின் அணுகுமுறையும், ராஜேஷின் பக்குவமும் சொல்வது என்ன?...

AKS – 66: காதலுக்காக எதுவும் செய்யலாமா? காயத்ரியின் அணுகுமுறையும், ராஜேஷின் பக்குவமும் சொல்வது என்ன? Article about Aadhalinaal kaadhal seiveer episode 66


சிவாவின் பிறந்தநாளைக் கொண்டாட மாயா தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு சிவா செல்கிறான். மாயாவும் சிவாவும் அலுவலகம் வராததைத் தொடர்ந்து சிவாவைத் தேடி மாயாவின் அறைக்கு காயத்ரி செல்கிறாள். சிவா கேக் வெட்டுகிறான். கேக்கின் முதல் துண்டை கையில் எடுத்து காயத்ரியைப் பார்க்கிறான். உடனே சுதாரித்த மாயா சிவாவை பெயர் சொல்லி கூப்பிடுகிறாள். சிவா மாயாவினடம் கேக்கை நீட்டுகிறான். மாயா அதிலிருந்து சிறிதளவு எடுத்து சிவாவிற்கு ஊட்டுகிறாள். காயத்ரி அதைக் காண முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

“All is far in love and war” என்று சொல்வார்கள். காதலில் அல்லது காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றாலும் மாயா தங்கியிருக்கும் அறைக்கு சிவா வந்திருக்கும்போது மாயாவின் அனுமதி இல்லாமல் அவள் அறைக்கு சிவாவை வாழ்த்துவதற்காக வருவதும், கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதும் மாயாவின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதைப் போன்றது. காயத்ரிக்கு சிவாவிடம் தனியாக பேச உரிமை இருக்கலாம். அதை சாதகமாகக் கொண்டு மாயாவிடமும் அதே உரிமையை எடுத்துக்கொள்ள முடியாது.

காயத்ரி நடந்தவற்றை புனிதாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். சிவா ஏதோ ஒரு வகையில் மாயாவுக்கு நம்பிக்கை அளிக்கப் போய்தான் சிவா தன்னைக் காதலிப்பான் என்று மாயா இவ்வளவு தூரம் உறுதியாக இருக்கிறாள் என காயத்ரி சொல்கிறாள். ஆனால் புனிதா அதன் இன்னொரு பக்கத்தைப் பற்றி பேசுகிறாள். காயத்ரியை மாயாவின் அறையில் எதிர்பாராத விதமாக கண்ட மாயா, பதற்றத்தில் சிவா தன்னுடன் நெருக்கமாக இருப்பதைப் போல காட்டிக் கொள்வதற்காக அவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று புனிதா சொல்கிறாள்.

சிவாவின் மனதில் நீதான் இருக்கிறாய் என்று சொல்லும் புனிதாவிடம் தனக்கு மாயாவைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது என்று காயத்ரி சொல்கிறாள். அதற்கு புனிதா, உனக்கு மாயா யாரென்றே தெரியாத போது அதைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம் என காயத்ரிக்கு அறிவுரை சொல்கிறாள்.

மாயாவுக்கு சிவா காயத்ரியின்மீது ப்ரியத்துடன் இருப்பது நன்றாகவே தெரிகிறது. அதைத் தன்பக்கம் திசை திருப்புவதற்காக காயத்ரியின் முன்னால் தனக்கே சிவாவின்மீது அதிகம் உரிமை இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள். இதைக் காணும் காயத்ரி தானாகவே ஒதுங்கிக் கொள்வாள் என நினைக்கிறாள்.



Source link

cinema.vikatan.com

வித்யா.மு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds