Home சினிமா செய்திகள் AKS 69: காதலை முகமூடி போட்டு மறைக்க முடியுமா? அரேஞ்ச்டு மேரேஜ் என்றால் காதல் தன்னால் வந்துவிடுமா?

AKS 69: காதலை முகமூடி போட்டு மறைக்க முடியுமா? அரேஞ்ச்டு மேரேஜ் என்றால் காதல் தன்னால் வந்துவிடுமா?

0
AKS 69: காதலை முகமூடி போட்டு மறைக்க முடியுமா? அரேஞ்ச்டு மேரேஜ் என்றால் காதல் தன்னால் வந்துவிடுமா?

[ad_1]

மாயா ஊருக்கு திரும்பிச் செல்லும் நாளில் அவளுக்கு நல்ல முடிவாக சொல்ல வேண்டும் என சிவாவிடம் கேட்டிருப்பாள். அதற்காக சிவாவை சந்திக்க ரெஸ்டாரென்ட் செல்லும் மாயா, தான் சிவாவை சந்திக்கச் செல்வதைப் பற்றி காயத்ரிக்கு மெசேஜ் அனுப்புகிறாள். அதைப் பார்த்து பதற்றமாக காயத்ரி அங்கே கிளம்பி வருகிறாள். மாயாவைப் பார்த்ததும் காயத்ரி, தான் வேறு ஒருவருடன் அங்கு வந்திருப்பதைப் போலக் காட்டிக் கொள்கிறாள். ஆனால் குழப்பத்தினால் மாயாவிடம் தப்பும் தவறுமாக உளறுகிறாள். மாயா, சிவா தன்னை வந்து சந்தித்து விட்டுச் சென்றுவிட்டதாக காயத்ரியிடம் கூறுகிறாள். சிவா பிடித்திருக்கிறது என்று சொன்னதாகவும் மாயா காயத்ரியிடம் சொல்கிறாள்.

AKS

காயத்ரிக்கு சட்டென்று அழுகை வந்து விடுகிறது. இரண்டு சொட்டு கண்ணீர் சிந்திய பிறகு மாயாவிடம் வாழ்த்துக்கள் சொல்கிறாள். பிறகு தான் கிளம்புவதாக சொல்லும் காயத்ரியை மாயா உட்காரச் சொல்கிறாள். காயத்ரிக்கு சிவாவின்மீது காதல் பொங்கி வழிகிறது. அவளால் எந்த முகமூடி போட்டும் அதை மறைத்துக் கொள்ள முடியவில்லை. முதலில் புனிதாவிடம், பிறகு சிவாவிடம், தற்போது மாயாவிடம்கூட அவள் தன்னை மறைக்க இயலாமல் வெளிப்படையாக எல்லாவற்றையும் காட்டி விடுகிறாள். சிவா தன்னிடம் பிடித்திருக்கிறது என்று சொன்னதாக மாயா சொல்லும் போது காயத்ரி அவளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அழுது விடுகிறாள். அதை மாயாவின் முன் செய்யக் கூடாது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. அது சரி, இதையெல்லாம் பார்த்துக்கொண்டு காதல் வருமா என்ன?

காயத்ரி அங்கிருந்து கிளம்புவதிலேயே குறியாக இருக்கிறாள். அவளால் மேற்கொண்டு மாயாவிடம் பேச முடியவில்லை. மாயா காபி சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று கட்டாயப்படுத்தி காயத்ரியை இருக்க வைக்கிறாள். எப்படி இருந்த சிவாவை இப்படி மாற்றி இருக்கிறாய் என்று மாயா காயத்ரியைப் பார்த்து கேட்கிறாள். சிவா மாயாவிடம் சொன்னதை கேட்கும் ஆர்வத்தில் காயத்ரி தவிப்பாய் இருக்கிறாள்.

சிவா மாயாவை சந்திக்க வருகிறான். மாயா சென்னை வந்ததில் சிவாவிற்கு பெரிய அளவில் மகிழ்ச்சி இல்லை என்பதை வெளிப்படையாக சொல்கிறான். தான் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த காதலில் அவ்வளவு தீவிரமாக இருக்கவில்லை என்பதை உணர்ந்ததாக சொல்கிறான்.

AKS

மாயாவை காயப்படுத்தி விடக்கூடாது என்று சிவா வார்த்தைகளை தேடித் தேடி பேசுகிறான். மாயாவின் அன்பிற்குதான் தகுதியானவன் இல்லை என்று சொல்கிறான். சிவா காயத்ரியை நேசிப்பதை சென்னை வந்தவுடனேயே புரிந்துகொண்டு விட்டதாக மாயா சொல்ல சிவாவிற்கு என்ன சொல்ல என்று தெரியாமல் விழிக்கிறான். தன்னால் செய்ய இயலாத ஒரு மாற்றத்தை சிவாவிடம் காயத்ரி ஏற்படுத்தியிருக்கிறாள் என்பதையும் அதுதான் காதல் என்பதையும் சிவாவிற்கு மாயா சொல்கிறாள்.

சிவா சொல்வதைப்போல மாயாவிற்கு சிவாவின் மேல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பரிசுத்தமான காதல் இருக்கின்றது. அது சிவா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவளை எண்ணச் செய்கிறது. அதனால் தான் மாயாவினால் காயத்ரிக்கும் சிவாவிற்கும் இருக்கும் காதல் தெரிந்தும் அதைப் புரிந்துகொண்டு இருவரையும் சேர்த்து வைக்கும் மனநிலைக்கு வர முடிகிறது. அவர்களை சேர்த்து வைப்பதற்காகத்தான் மாயா சிவாவுடன் மீண்டு இணைவது பற்றி பேசி, அவன் முடிவைக் கேட்டு நாடகமாடியிருக்கிறாள். எல்லா உண்மைகளையும் காயத்ரியிடம் சொல்லி முடிக்கும்போது காயத்ரி அழுகிறாள். காயத்ரிக்குப் பின்னிருக்கையில் உட்கார்ந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் சிவாவை மாயா அழைக்கிறாள்.

AKS

சிவாவும் காயத்ரியும் ஒருவரைப் பார்த்து ஒருவர் மகிழ்ச்சியில் சிரித்துக் கொள்கின்றனர். இருவரும் பிறகு வெட்கப்படுகின்றனர்.முந்தைய தலைமுறைகளைவிட இந்த தலைமுறை பெண்கள் மிகவும் ப்ராக்டிக்கலாக இருக்கின்றனர் என்று சொல்லலாம். மாயவைப் போல புரிந்து கொண்டு விலகி நட்பாகத் தொடர்பவர்கள் சமீபமாக அதிகரித்து வருகின்றனர். ஆனால் சமயங்களில் காயத்ரியின் இடத்தில் இருக்கும் பெண்கள் மாயா சிவாவுடன் நட்பாக தொடர்வதை விரும்புவது இல்லை. அந்த நட்பு மீண்டும் எப்போது வேண்டுமானாலும் காதலாக மாறலாம் என்றும் முன்பிருந்த காதல் அப்படியே இருக்கும் என்றும் சந்தேகப்பட்டு கொண்டே வாழ்வைக் கடக்கின்றனர். சிவா, காயத்ரியின் காதல் எவ்வளவு ஆழமானது என்பதை மாயா புரிந்து கொண்டதோடு அதை அவர்கள் இருவருக்கும் எடுத்துச் சொல்கிறாள். தனது கையோடு கொண்டு வந்திருக்கும் ரோஜாப்பூவை கொடுத்து காயத்ரிக்கு ப்ரொபோஸ் செய்யும்படி சிவாவிடம் சொல்கிறாள்.

சிவா பூவை நீட்டும்போது காயத்ரி அதை வாங்காமல் சட்டென்று எழுந்து, ’எங்க அப்பா’ என்று சொல்லி யோசிக்கிறாள். மாயா அப்படி என்றால் நாம் இருவரும் இணைந்து கொள்வோம் என்று சிவாவிடம் சொல்கிறாள். சிவாவின் கையை மாயா பிடித்திருப்பதைப் பார்த்து காயத்ரி பொறாமை கொள்கிறாள். அவள் கண்களில் பொசஸிவ்னஸ் தெரிகிறது. உடனே வேகமாக எழுந்த இடத்தில் அப்படியே உட்காருகிறாள். இந்த தருணத்தில் காயத்ரி, மாயா இருவரும் வெவ்வேறு தளத்தில் வளர்ந்தவர்கள் என்ற வித்தியாசம் நன்றாக தெரிகிறது. சிவா மாயாவை சந்திக்கப் போகிறான் எனும் போது காயத்ரி பதற்றமாகி அழுகிறாள். ஆனால் சிவா காயத்ரியைத்தான் விரும்புகிறான் என்று தெரிந்ததும் மாயா அதை மனதார ஏற்றுக் கொண்டு அவர்கள் காதலை சேர்த்து வைக்கவும் செய்கிறாள்.

AKS

காயத்ரி சிறுவயது முதலே தனது குடும்பத்தினரின் கட்டுபாட்டில் வளர்ந்தவள். கல்லூரி முடியும் வரை மூன்று ஆண்டுகளாக தன்னைப் பின் தொடர்ந்து, கவனித்து, காதலித்து வந்த சுந்தரைக் கூட காயத்ரிக்கு யார் என்று தெரியாத அளவிற்கு அவள் யாரைப் பற்றியும் கவனிக்காமல் கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தாள். அவள் வாழ்வில் காதலை பற்றி யோசித்தது கிடையாது. அதற்கான சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை. இன்னொரு பக்கம் அவளை அந்த அளவு யாரும் ஈர்க்கவில்லை என்றும் சொல்லலாம்.

சுந்தர் காயத்ரியை காதலிப்பதாக பெண் பார்க்க வந்த நேரம் சொல்லிய போது கூட காயத்ரிக்கு அது மகிழ்ச்சி அளித்தது தவிர சுந்தரின் மேல் காதல் வந்து விடவில்லை. காதல், ஈர்ப்பு என்பதெல்லாம் தானாக தோன்றக்கூடியது. அரேஞ்ச்ட் மேரேஜ் செய்து வைத்தால் பின்பு அவர்களுக்குள் காதல் தானாக வந்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கும் சமூகத்தில் இவற்றையெல்லாம் புரிய வைக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்பதே கேள்விக்குறிதான்!

காயத்ரி தன் காதலை எப்படி சுந்தருக்கு புரியவைப்பாள் ?

கவிதா பாண்டியன் அலெக்சாவிடம் பேசியதை கேட்பாளா?

காத்திருப்போம்!

[ad_2]

Source link

cinema.vikatan.com

வித்யா.மு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here