Homeதமிழ் Newsஆரோக்கியம்Anita left Big Boss, Here is the shocking reason behind | பிக்பாஸில்...

Anita left Big Boss, Here is the shocking reason behind | பிக்பாஸில் இருந்து அனிதா வெளியேற இவர்தான் காரணமா


தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் பல விதவிதமான ஷோக்களை விட பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி 2017ம் ஆண்டு தொடங்கி 2022 வரை வெற்றிகரமாக 5 சீசன்களை நிறைவு செய்துள்ளது. தற்போது டிவியில் இருந்து டிஜிட்டலுக்கு தாவியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. 

24×7 என்ற நேரலை நிகழ்ச்சியாக பிக்பாஸ் அல்டிமேட் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து பார்க்க முடியாதவர்களுக்காக விறுவிறுப்பான காட்சிகளை மட்டுமே கொண்ட பிக்பாஸ் அல்டிமேட் ஷோ தினந்தோறும் இரவு ஒன்பது மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் படிக்க | விக்ரம் படம் தொடர்பாக வீடியோவுடன் சர்ப்ரைஸ் கொடுத்த லோகேஷ்!

இந்நிலையில் சிம்பு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். ஹவுஸ் மேட்ஸ்களுக்கு பிக்பாஸ் பல்வேறு டாஸ்குகளை கொடுத்து வருகின்றார். அதன்படி இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய்,தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் சினேகன் வெளியேறினார். நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். 

இதற்கிடையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அனிதா, சுருதி, நிரூப், தாமரை, ஜூலி,சதீஷ் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் ஜூலி இந்த வாரம் பல வலைதளத்தில் நடத்தட்ட வாக்கெடுப்பில் முதல் இடத்தில் இருந்து இந்த வாரம் பல வலைதளத்தில் நடத்தட்ட வாக்கெடுப்பில் முதல் இடத்தில் இருந்துவந்தார். இதனால் தற்போது சதீஷ், அனிதா, சுருதி ஆகிய மூவரில் யாரவது வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதில் சதிஷ் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் அனிதா வெளியேறி இருந்தார். பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த அனிதா இன்ஸ்டாகிராமில் பயோவை மாற்றி இருக்கிறார். அதன்படி இந்த வார எலிமினேஷனில் அனிதா குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | BB Ultimate: பிக்பாஸ் கமலஹாசன் அல்டிமேட்டில் இருந்து விலகுவது ஏன்? உறுதியான விலகல்! ரசிகர்கள் ஏமாற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Siri Remote for Apple TV updated with new firmware version

Apple has released a remote update for a remote. Today, the company is rolling out a new firmware update for the Siri Remote. The...