Homeதமிழ் Newsஆரோக்கியம்Annaatthe trailer to be released tomorrow at 6PM | ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்த...

Annaatthe trailer to be released tomorrow at 6PM | ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்த ட்ரெய்லர்; நாளை மாலை 6 மணிக்கு..!!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடித்துள்ள “அண்ணாத்த” படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனையடுத்து அந்த படம் குறித்து தொடர்ந்து அப்டேட் வந்துக்கொண்டே இருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர். இந்நிலையில் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக,  அண்ணாத்த படத்தில் ட்ரெய்லர் நாளை 6  மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ALSO READ | “அண்ணாத்த” படத்தின் மருதாணி பாடல் வெளியானது – தரமான பாடல் என புகழாரம்

தர்பார் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா (Nayanthara), கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நடிகர் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் அண்ணாத்த.  இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளி வந்ததிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரஜினிகாந்த், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து கதையில் நடித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது. இந்த படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனம் தயாரித்துள்ளது.

சில நாட்கள் முன்னதாக,  “அண்ணாத்த” படத்தின் மருதாணி பாடல்  வெளியாகி இணையதளங்களில் வைரலானது.  அதை தொடர்ந்து வெளியான “மருதாணி செவப்பு செவப்பு” என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

திரையரங்குகளில் படத்தை திரையிடுவதற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் சான்றிதழ் (CBFC)கிடைத்துள்ளது. இது சென்சார் போர்டு ஆஃப் ஃபிலிம் சர்டிபிகேஷனால் (CBFC) U/A- சான்றிதழுடன் வெளிவருகிறது. “அண்ணாத்த” படம் நவம்பர் 4, 2021 அன்று உலகளவில் திரையிடப்படுகிறது. இந்த படத்திற்கான பணி 2019 டிசம்பர் மாதம்  தொடங்கி, 2021 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது! வெளியானது அண்ணாத்த டீஸர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read