Home Sports விளையாட்டு செய்திகள் As TN BJP Leader L Murugan becomes union minister speculation about next leader deepens | மத்திய அமைச்சராகும் எல்.முருகன்; அடுத்த பாஜக தலைவர் யார்..!!!

As TN BJP Leader L Murugan becomes union minister speculation about next leader deepens | மத்திய அமைச்சராகும் எல்.முருகன்; அடுத்த பாஜக தலைவர் யார்..!!!

0
As TN BJP Leader L Murugan becomes union minister speculation about next leader deepens | மத்திய அமைச்சராகும் எல்.முருகன்; அடுத்த பாஜக தலைவர் யார்..!!!

[ad_1]

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு, மகத்தான வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்ட பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படாத நிலையில், தற்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. 

இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனையில், 43 பேர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 43 பேர் மத்திய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த பட்டியலும் வெளியாகியுள்ளது.

தற்போது, தமிழக பாஜக தலைவராக இருக்கும் எல்.முருகன் மத்திய அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டதால் அந்த பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு வலுத்து வருகிறது.
 
இந்த நிலையில், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வானதி சீனிவாசனுக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் தற்போது இவர்கள் இருவரும் எம்.எல்.ஏவாக இருப்பதால் அதற்கான சாத்தியம் உள்ளதா என்பதை உறுதியாக கூற இயலவில்லை. அத்துடன், வானதி சீனிவாசன் பாஜக தேசிய மகளிரணித் தலைவராகவும் உள்ளார்.

ALSO READ | மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்களின் பட்டியல் வெளியானது

பாஜக தலைவர் எல்.முருகன், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தில்லிக்கு பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், பாஜக மேலிட, தமிழக தலைவராக, துடிப்பான இளைஞர் ஒருவரை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் தற்போதுதான் பாஜகவில் இணைந்தவர் என்பதோடு, அவரை விடவும் கட்சியில் நீண்ட காலம் இருக்கும் பலர் உள்ளனர்.

மேலும், பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன்  ஆகிய இருவருமே மாநிலத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் ஏற்கனவே பதவி வகித்தவர்கள் என்பததால், அதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜகவை தலைமை தாங்கப் போவது யார் என்பதை அறிந்து கொள்ள இன்னும் நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். 

ALSO READ | பாஜகவுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கருத்து.. கூட்டணி தொடருமா? ஓபிஎஸ் ட்வீட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here