Bharathiraja joins in Dhanush in D44 movie – தமிழ் News

0
22
Bharathiraja joins in Dhanush in D44 movie – தமிழ் News


dhanush040821 2

தனுஷ் நடித்து வரும் 43வது திரைப்படமான ’மாறன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் விரைவில் அவரது 44-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தனுஷின் ‘D44’ படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘D44’ படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

dhanush040821 1

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அனிருத் இணைகிறார் என்பதும், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் மற்றும் அனிருத் இந்த படத்தின் மூலம் இணைவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here