Homeதமிழ் Newsஆரோக்கியம்Big Boss 5 launch date and time officially announced | பிக் பாஸ்...

Big Boss 5 launch date and time officially announced | பிக் பாஸ் 5 தொடங்கும் தேதி, நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு


Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஊகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். 

இதற்கிடையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 (Bigg Boss Tamil) புரொமோ வெளியானது. இந்த புரொமோவில் கோட் ஷூட்டில் இருக்கும் கமல்ஹாசன் (Kamalhaasan) தனது கண்களை உருட்டி மிரட்டி, ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என்று பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகம் செய்து வைத்தார். 

ALSO READ | Bigg Boss Tamil Issue: பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்: பாஜக புகார்

இந்நிலையில் தற்போது இந்த ஐதாவது சீசன் எப்போது தொடங்கும் என பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டது. அதன்படி பிக் பாஸ் 5 தொடங்கும் தேதி மற்றும் நேரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. வரும் அக்டோபர் 3ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட துவக்க நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதை ப்ரொமோ வீடியோவில் வெளியிட்டு இருக்கிறது.

இதனால் தற்போது பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

போட்டியாளர்களாக வர போகும் பிரபலங்கள் தற்போது நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் கண்டிப்பாக இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Bigg Boss Tamil Season 5: இரண்டாவது புரொமோ வீடியோ வெளியானது; கசிந்தது முக்கிய தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read