Monday, November 29, 2021
Homeதமிழ் Newsஆரோக்கியம்Bigboss tamil promo today Dance master marking tamarai selvi Ithu Pakka Game...

Bigboss tamil promo today Dance master marking tamarai selvi Ithu Pakka Game Flan | BiggBoss Promo ‘இது பக்கா கேம் ஃபிளான்’ தாமரையை குறி வைக்கும் டான்ஸ் மாஸ்டர்


Biggboss Tamil Promo: பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரையும் தனக்கு ஏற்றார்போல் தாமரை பயன்படுத்திக் கொள்வதாக புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள டான்ஸ் மாஸ்டர் அமீர் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், கொரோனா பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், இந்த வாரம் யார்? பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

அதேநேரத்தில் பிக்பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியும் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளார். இதேபோல், நடன இயக்குநர் அமீர் மற்றும் விஜய்யின் நண்பர், நடிகர் சஞ்சீவ் ஆகியோரும் புதிய போட்டியாளர்களாக களத்தில் இறங்கியுள்ளனர்.

அவர்களது வருகை வீட்டிற்குள் புதிய விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் நிகழ்ச்சியை முழுமையாக பார்த்து விட்டு வந்திருப்பதால், அவர்கள் கொடுக்கும் டிப்ஸ் போட்டியாளர்களை யோசிக்க வைக்கிறது. இவ்வளவு நாட்கள் தாங்கள் எப்படி விளையாடிக் கொண்டிருக்கிறோம்? மக்களிடம் எப்படி ரீச்சாகி இருக்கிறோம்? என்பதையெல்லாம் புதிய வைல்டு கார்டு என்டிரி போட்டியாளர்களான அமீரும், சஞ்சீவும் கூறுவதை வைத்து யூகித்துக் கொள்கின்றனர். 

ALSO READ | பிக் பாஸ் தமிழ் 5: “புத்திசாலினு சொல்லி தள்ளாதிங்க” அண்ணாச்சியுடன் மோதும் அபிஷேக்

 

அந்தவகையில் இன்று வெளியாகியிருக்கும் புரோமோவில் தாமரையின் அணுகுமுறை மற்றும் கேம் ஃப்ளான் என்ன?, அவர் எப்படி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை அமீர், நிரூப்பிடம் கூறுகிறார்.

அந்த புரோமோவில் நிலத்தடி ஜெயிலுக்குள் அமர்ந்தவாறு அமீரும், நிரூப்பும் பேசிக்கொள்கின்றனர். அப்போது பேசும் அமீர், ” தாமரை பக்காவாக கேம் விளையாடுகிறார். அவருக்கு ஏற்றார்போல் இங்கிருக்கும் போட்டியாளர்களை பயன்படுத்திக் கொள்கிறார். இது மற்ற போட்டியாளர்களான உங்களுக்குத் தெரியவில்லை” எனக் கூறுகிறார். ” அவளுக்கு எதுவும் தெரியவில்லை, அப்பாவியாக இருக்கிறாள்” என நிரூப் கூறும்போது குறுக்கிடும் அமீர், ” நீங்க எல்லோரும் இங்க தான் தப்பு பண்றீங்க, அவுங்கள நீங்க அப்பாவிய நினைக்கிறது தான் அவுங்களோட கேம் ஃப்ளான்’ எனக் கூறுகிறார்.

நிரூப் ஏற்கனவே தாமரை மீது பாசம் கொண்டவராகவும், அவருக்காக கேம் விளையாடிக் கொடுப்பவராகவும் இருந்தார். ஆனால், அவரிடமே சென்று தாமரையின் கேம் பிளான் இது தான் என அமீர் கொளுத்தி போட்டிருப்பதால், நிருப்பீன் தாமரை மீதான பார்வை இனி வரும் நாட்களில் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அமீர் சொன்னதை நிரூப் எந்தமாதிரி அணுகப்போகிறார்? தாமரையிடம் எப்படி பழகப்போகிறார்? என்பது இன்றைய எபிசோடில் இருந்து நிச்சயம் பார்க்கலாம். புதிதாக வந்த அமீர், தன்னுடைய கேம்மை விளையாட தொடங்கியிருப்பதால், கூடுதல் சுவாரஸ்யத்தை வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். 

ALSO READ | Big Boss: ‘தம்பி யாருப்பா நீ?’ புரோமோவில் இருக்கும் அந்த நபர் யார்? நெட்டிசன்கள் புலம்பல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds