Homeசினிமா செய்திகள்Cooku with comali fame Pughaz earned rs25 lakhs within six hours -...

Cooku with comali fame Pughaz earned rs25 lakhs within six hours – தமிழ் News


குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ், ஆறு மணி நேரத்தில் ரூபாய் 25 லட்சம் சம்பாதித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றில் கலந்து கொண்ட புகழ் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் என்பதும் அந்த பிரபலத்தின் அடிப்படையில் அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது என்பதும் தற்போது சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விவேக்கின் கடைசி நிகழ்ச்சியான ‘லொள் எங்க சிரி பார்ப்போம்’ என்ற நிகழ்ச்சி அமேசானில் வெளியானது. இந்த நிகழ்ச்சியை விவேக் மற்றும் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக சதீஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், ஆர்த்தி, அபிஷேக், பிரேம்ஜி அமரன், மாயகிருஷ்ணன், புகழ் உள்பட 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியாளர்கள் ஆறு மணி நேரம் இந்த நிகழ்ச்சியில் மற்றவர்களை சிரிக்க வைத்து தாங்கள் சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் நிகழ்ச்சியின் விதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அனைவரும் வெளியேறி நிலையில் கடைசியாக புகழ் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் டைட்டில் வின்னர்கள் என அறிவிக்கப்பட்டனர். இதனை அடுத்து புகழ் மற்றும் அபிஷேக் ஆகிய இருவருக்கும் தலா 25 லட்சம் பரிசு பணம் வழங்கப்பட்டது. 6 மணி நேரத்தில் ரூபாய் 25 லட்சம் சம்பாதித்த புகழுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read